மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா 4 நாள் பயணமாக, நேற்று டெல்லியில் இருந்து விசேஷ விமானம் மூலம் இலங்கை சென்றார்.
மரபுக்கு மாறாக இலங்கையின் வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் கொழும்பில் உள்ள பண்டாரநாயகா விமான நிலையத்துக்கு நேரில் சென்று கிருஷ்ணாவை வரவேற்றார். பின்னர் முக்கிய பிரமுகர்கள் அறைக்குச்சென்ற அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தம் மற்றும் தமிழர் தலைவர்களையும், முஸ்லிம் தலைவர்களையும் எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சேயை, எஸ்.எம்.கிருஷ்ணா இன்று சந்திக்கிறார். அப்போது அவர் இலங்கையில் தமிழர்களுக்காக இந்திய உதவியால் நிறைவேற்றப்படும் வீடு கட்டும் திட்டத்தை விரைவுபடுத்துவது பற்றியும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது பற்றியும், இலங்கை தமிழர் பிரச்சினையில் அதிகார பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காண்பது குறித்தும் வற்புறுத்துகிறார்.
இலங்கை பிரதமர் டி.எம். ஜெயவர்த்தனே, இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ் ஆகியோரையும், எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசுகிறார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, காலே ஆகிய நகர பகுதிகளுக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா செல்கிறார்.
கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையின் நினைவு சின்னத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா மரியாதை செலுத்துகிறார். யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு ரூ.1,319 கோடி செலவில் 49 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா நிதி உதவி அளித்து இருக்கிறது. இதன் மூலம் 50 வீடுகளை மட்டுமே இலங்கை கட்டி இருக்கிறது. இந்த வீடுகளை, தமிழர்களுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா வழங்குகிறார். மேலும் 10 ஆயிரம் சைக்கிள்களை தமிழர்களுக்கு வழங்குகிறார்.
கிளிநொச்சியில் தமிழர்களுக்கு மருந்து பொருட்களை வழங்குகிறார். காலே நகரில் இந்திய நிதியால் அமைக்கப்பட்டு உள்ள ரெயில்வே திட்டங்களை எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைக்கிறார்.
எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயணத்துக்கு முன்னதாக, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஸ் வரதன் தலைமையில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கை சென்றனர். அவர்கள் இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீங்கலா தலைமையிலான அதிகாரிகள் குழுவினருடன் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழன் உயிர்களை எடுத்துவிட்டு வீடுகளை கொடுக்க சென்றிருக்கிறார். நாதியற்ற இலங்கை தமிழன் பொங்கி எழும் கோபத்தையும் , நெஞ்சை அடைக்கும் துக்கத்தையும் மறைத்து அடக்கி கொண்டு கரம் கூப்பி வீடுகளை வாங்குவான் (அவனுக்கு வேறு வழியில்லை).
உணர்வற்ற இந்திய தமிழன் கரவொலி எழுப்பி நடந்த துயரங்களை மறந்து வாக்களித்து மீண்டும் அரியணை ஏற்றுவான் கொலைகார கூட்டத்தை (தண்டிக்கும் அனைத்து வழிகளும் இவனுக்கு இருந்தும் )
அவன் வீடுகளை வாங்குவது வாழ்வதற்காக அல்ல…! இதுநாள்வரை அடக்கி வைத்த அழுகையை வீட்டுக்கு உள்ளேயேனும் (கதவுகளை சாத்தி) சத்தம் போட்டு அழலாமே என்று தான் ....
நல்ல கருத்தும் பின்னூட்டமும்.நம் நாட்டில் தமிழர்கள் நடிகர்களின் பின்னே செல்கிறார்கள்.கோயில் கட்டுகிறார்கள்.புஸ்வாணம் போல் நாம் இருக்கிறோம். ஈழத் தமிழர்களை எதுவும் கூற முடியாது.இராணுவ சுற்றி வளைப்பில் இருக்கும் அவர்கள் எதுவும் செய்ய முடியாத நிலை.வீடு வாங்கா விட்டால் அவர்கள் மீது இராணுவம் நடவடிக்கை எடுக்கும் இல்லையேல் சிங்களரை அங்கு குடியேற்றி விடும்.இதற்கிடையில் சிங்களத்திற்கு சாமரை வீசும் தமிழர்களும் இருப்பதால் அப்பாவி ஈழத் தமிழன் சோகம் சொல்ல முடியாதது.அதை அனுபவிக்கும் அவனால் கூட அதை சொல்லி விட முடியாது. நாம் எப்போது திருந்தப் போகிறோம்?அவர்களுக்கு எப்போது விடிவு?
ReplyDelete