இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளார்.
4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த திங்கட்கிழமை அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பொங்கல் கொண்டாடினார். இதையடுத்து அவர் நேற்று காலை ராஜபக்சேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடம் நீடித்ததாகத் தெரிகிறது.
அப்போது கிருஷ்ணா இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்பது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது, இரு நாடுகளுக்கிடையேயான உறவு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பது குறித்து அதிபரிடம் வலியுறுத்தினார். மேலும் தமிழர்கள் மறு குடியமர்த்துவது குறித்து விரிவாகப் பேசினார்.
அதிகாரங்களை பகிரந்தளிப்பதைத் தான் அநநாட்டில் வாழும் தமிழர்கள் நீண்ட காலமாக எதிர்பபார்க்கின்றனர். எனவே, விரைந்து அவர்களுக்கு அதிகாரங்கள் கொடுக்குமாறு கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது பிரிவின்படி தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிரந்தளிக்க இலங்கை தயாராக இருப்பதாக ராஜபக்சே உறுதியளித்துள்ளார்.
தமிழர்களை மறுகுடியமர்த்துவது குறித்தும், இதற்காக இந்தியா அளித்த உதவியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் உடனிருந்தார்.
இதையடுத்து கிருஷ்ணா இலங்கை பிரமதர் டி.எம். ஜெயரத்னேவை சந்தித்து பேசினார். பிறகு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை வாழ் தமிழர்களுக்கு 49,000 வீடுகள் கட்ட இந்தியா நிதி அளிக்கும்.
இலங்கையி்ல உள்ள தமிழர் அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்த கிருஷ்ணா இனப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
தனது பதவியை தக்கவைத்து கொள்ளவும், மேலைநாடுகளின் நெருக்கடியை சமாளிக்கவும், தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்கும் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் சேர்ந்து ராஜபக்சே கையாளும் புத்திகெட்ட தந்திரம் தான் இது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆமா...தமிழனுடைய நாட்டில் தமிழனுக்கு அதிகாரங்களை பகிர்ந்தலிக்க நீ யார்...?
No comments:
Post a Comment