நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கும் படம் பனித்துளி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சுஹாசினி மணிரத்னம், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குனர் சேரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் டி. சிவா பேசியதாவது;-
''சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவதற்கு தியேட்டர்கள் இல்லாததால் நிறைய தயாரிப்பாளர்கள் நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். ஆதலால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம்.
அதன்படி பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் இனிமேல் ஜனவரி 14, ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்ட் 15, தீபாவளி என வருடத்தில் இந்த ஐந்து நாட்களில் மட்டுமே வெளியாக வேண்டும்.
மற்ற நாட்களில் குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட்டுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
நடிகை சுஹாசினி பேசியதாவது:-
"நான் ஒரு நடிகையாகவோ, சினிமா சார்ந்தவராகவோ இல்லாமல் சாதரண பெண் ரசிகை என்ற அளவில் ஒரு கோரிக்கையை இங்கே வைக்கிறேன். ஹீரோக்களில் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை தமிழ் ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். நடிகைகளை மட்டும் அழகழகாக அறிமுகப்படுத்துகிறீர்களே... ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்" என்றார்.
இயக்குனர் சேரன் பேசியதாவது:-
''சுஹாசினி பேசிய ஹேண்ட்சம் ஹீரோக்கள் எல்லோருமே வெள்ளை நிறமுடையவர்கள் என்பதால் அப்படி சொல்லி இருக்கிறார். கறுப்பாக இருப்பவர்களிலும் ஹேண்ட்சம் ஹீரோக்கள் இருக்கிறார்கள் மேடம். அவர்களையும் ரசியுங்கள்'' என்றார்.
இருவருக்குமிடையேயான இந்த 'ஹேண்ட்சம்' குறித்த மோதல், எல்லோரிடமும் புன்னகை கலந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படின்னா இந்த அம்மணி மணிரத்தினத்தை (அதாங்க இவங்க புருஷன்) ரசிக்கிறதே இலையோ ...!!
கொஞ்ச நாளாவே இந்த அம்மணி ஓவரா தான் போய்கிடு இருக்கு மணிரத்தினம் சார் பார்த்துங்கோ .....
No comments:
Post a Comment