ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 'ராணா' படம் நிறுத்தப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது பூரண நலமாகியுள்ளார். இதையடுத்து 'ராணா' படவேலைகள் மீண்டும் துவங்கும் என எதிர்பார்த்த வேலையில் அதற்கு பதிலாக 'கோச்சடையான்' என்ற புதிய படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
'ராணா' சரித்திர படம் என்பதால் பல கிலோ எடையுள்ள கிரீடம் மன்னர் உடுத்தும் ஆடைகளை அணிதல், வாள் சண்டை போடுதல் குதிரைசவாரி என்பதெல்லாம் இருக்கும். டாக்டர்கள் அதுமாதிரி சீன்களில் நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் அதை நிறுத்திவிட்டு கோச்சடையானை துவக்கியுள்ளனர்.
இப்படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்குனர் மேற்பார்வை செய்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரஜினி ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடக்கிறது. அசின், அனுஷ்கா, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் போன்றோர் பரிசீலிக்கப்படுகின்றனர். படப்பிடிப்பு எப்போது துவங்கும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து ரஜினியிடம் கேட்டபோது நான் தற்போது பூரண நலமாக இருக்கிறேன். கோச்சடையான் படத்தில் அடுத்த மாதம் நடிப்பேன் என்றார். அவர் மீண்டும் நடிப்பதை தமிழ் திரையுலகத்தினரும் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment