சென்னை சேப்பாக்கம் கடற்கரை சாலையில் கம்பீரமான 10 மாடி எழிலக கட்டிடம் உள்ளது. இங்கு பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. எழிலக கட்டிட வளாகத்திலேயே பின்புறமாக தபால் நிலையத்தையொட்டி 150 ஆண்டு பழமை வாய்ந்த இரட்டை மாடிகளுடன் இரு கட்டிடங்கள் இருக்கிறது.
ஒரு கட்டிடத்தில் தொழில் வணிக துறை இயக்குனர் மற்றும் ஆணையர் அலுவலகமும் மற்றொரு கட்டிடத்தில் சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகமும் செயல்படுகிறது. நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தொழில் வணிகத் துறை அலுவலக கட்டிடத்தில் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. தீமளமளவென்று பரவி அருகில் இருந்த சமூக நலத்துறை இயக்குனர் அலுவலக கட்டிடத்துக்கும் பரவியது.
இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கோட்டை, தேனாம்பேட்டை, அசோக் நகர் உள்பட பல இடங்களில் இருந்தும் 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரு கட்டிடங்களிலும் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது.
தீயணைப்பு வீரர்கள் நாலாபுறமும் கட்டிடத்தை சூழ்ந்து நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்பு தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்துக்குள் உள்ளே சென்று புகை மூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது அந்த பழைய கட்டிடத்தின் “சீலிங்” இடிந்து தீயணைப்பு வீரர் அன்பழகன் மீது விழுந்தது. அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார்.
அவரை மீட்பதற்காக கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா, மற்றொரு அதிகாரி முருகன் மற்றும் வீரர்கள் சென்றனர். அவர்கள் மீதும் கட்டிட சீலிங் இடிந்து விழுந்தது. இதில் பெண் அதிகாரி பிரியா, முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மற்ற வீரர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பிரபாகரன் என்ற வீரர் லேசான காயத்துடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரும் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் தற்போது மோசமான நிலையில் உள்ளது. இடிந்து விழும் அபாயம் இருப்பதால் வீரர்கள் உள்ளே செல்லவில்லை.
ஸ்கை லிப்ட் ஏணி மூலம் வெளியில் இருந்தவாறே தீயை அணைத்து காலை 9 மணிக்கு முழுமையாக கட்டுப்படுத்தினார்கள். பலியான தீயணைப்பு வீரர் அன்பழகன் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
அரசு துறை இயக்குனர் அலுவலகம் என்பதால் ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருந்தது. கம்ப்யூட்டர் அறைகளுக்கும் ஏ.சி. வசதி இருந்தது. இரவில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கிறது. தீயில் இரு அரசு துறை அலுவலகங்களிலும் இருந்த முக்கிய பைல்கள், ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. கம்ப்யூட்டர்களும் எரிந்து விட்டது.
இதில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த தகவல்கள் அழிந்து விட்டது. அலுவலகங்கள் செயல்பட முடியாதபடி கட்டிடம் நாசமானதால், இரு அரசுதுறை அலுவலகங்களும் தற்காலிகமாக வேறு கட்டிடத்துக்கு மாற்றப்படுகிறது. தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மேயர் சைதை துரைசாமி சென்று பார்வையிட்டார்.
தீயை அணைக்க சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தார். போலீஸ் கமிஷனர் திரிபாதி, தீயணைப்பு இயக்குனர் போலோநாத், இணை இயக்குனர் பாலுசாமி, இணை கமிஷனர்கள் தாமரைக்கண்ணன், சேஷசாயி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தீ விபத்து பற்றி அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தீவிபத்து நடந்த கட்டிடத்தின் அருகே தபால் அலுவலகமும், பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படும் 10 மாடி கட்டிடமும் உள்ளது. தீயில் இந்த கட்டிடங்கள் தப்பி விட்டன. தீ பயங்கரமாக எரிந்து இருந்தால் இந்த கட்டிடத்துக்கும் பரவி பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும்.
ஆனால் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது. பொங்கல் விடுமுறை என்பதால் எழிலகத்திலும், பக்கத்து கட்டிடங்களிலும் ஊழியர்கள் யாரும் இல்லை. மேலும் இரவு நேரத்தில் தீப்பிடித்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
அரசின் (முன்னாள், இந்நாள் அரசு) சம்பந்தமான பல முக்கியமான ஆவணங்கள் இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலாகி போச்சுன்னு சொல்லவாரான்களோ...ம்ம்ம்....மத்திய அரசுக்கு கணினி திருடு போகும் அல்லது முக்கிய வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் காணாமல் போகும். மாநில அரசுக்கு தீ பத்தி சாம்பலாகி போகுமா...!!!
என்னமோ பண்ணிட்டு போங்க... எங்களுக்கு மிக்சி, கிரைண்டார், மின்விசிறி, ஆடு, மாடு, கோழி, கொக்கு , வாத்து ...எல்லாம் இலவசமாக கொடுக்க மறந்திடாதீங்கப்பா
http://adiraiseithi.blogspot.com/p/blog-page_18.html
ReplyDelete