Friday, February 20, 2015

லிங்கா விவகாரத்தில் விஜய்யின் பங்கு என்ன ?

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க விடாமல் ரஜினியை இரு முன்னணி நடிகர்கள் தடுப்பதாக அதன் விநியோகஸ்தர்கள் சிலர் பிரஸ் மீட் வைத்து நிருபர்களிடம் சில தினங்களுக்கு முன்பு கூறினர் அல்லவா.. 

அந்த நடிகர்கள் யார் யார் என்று மீடியாக்காரர்கள் திரும்ப கேட்டதற்கு அதை இப்போது சொல்ல முடியாது என்று கூறினர் விநியோகஸ்தர்கள். 

ஆனால் ஆப் த ரெக்கார்டாக, அந்த நடிகர்கள் விஜய் மற்றும் சரத் குமார்தான் என்று கூறியதாக தகவல் பரவியது. 

சில மீடியாக்களில் செய்திகளும் வெளியானது. இந்த தகவல் கேள்விப்பட்டதும் விஜய்யின் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

 யார் வம்புக்கும் போகாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய்யை இந்த விநியோகஸ்தர்கள் எதற்காக வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளனர். 

'லிங்கா விவகாரத்தில் விஜய்க்கு துளியும் சம்பந்தமில்லை. இந்த நிலையில் அவர் ரஜினியிடம் போய், லிங்காவுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டாம் என்று கூறியதாக விநியோகஸ்தர்கள் சிலர் கூறியிருப்பது விஷமத்தனமானது. 

போகிற போக்கில் அத்தனை பேர் பெயரையும் இழுத்து விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள் இவர்கள். இதுபோன்ற விஷமப் பிரச்சாரத்தை லிங்கா விநியோகஸ்தர்கள் நிறுத்த வேண்டும்," என்று தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.


Wednesday, February 18, 2015

ஓமைகாட்!: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த ராம்ஜெத்மலானி ( வீடியோ)

மும்பையில் நடந்த விருது விழாவில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஹம் லோக் விருதுகள் வழங்கும் விழா திங்கட்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல இந்தி பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனா சந்தாவர்கரை பார்த்தும் அவரை கட்டிப்பிடித்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார்.

 நடிகையான லீனா திருமணமான சில நாட்களிலேயே கணவரை இழந்தார். அதன் பிறகு அவர் ஏற்கனவே 3 முறை திருமணமான பாடகர் கிஷோர் குமாரை திருமணம் செய்து சுமித் கங்குலி என்ற ஆண் குழந்தைக்கு தாயானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றான் மனைவிக்கு ராம் ஜெத்மலானி முத்தம் கொடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக ராம்ஜெத்மலானி கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு லிப் டூ லிப் கொடுத்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்டர்நெட்டில் தீயாக பரவியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராம் ஜெத்மலானி.





ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடும் "லிங்கா விநியோகஸ்தர்கள்"?

லிங்கா விவகாரத்தை பக்கா அரசியலாக்கிவிட்டார்கள், அதன் விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர். லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்பதாகக் கூறிக் கொண்டு, படம் வெளியான முதல் வாரமே படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். 

அடுத்த சில தினங்களில் சீமான், வேல் முருகன் போன்ற அரசியல்வாதிகளை அழைத்து உண்ணாவிரதமிருந்தார்கள். அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் செவழித்து பிரஸ் மீட்டுகள் நடத்தி வரும் இவர்கள் இப்போது, ரஜினி குடியிருக்கும் ஏரியாவிலிருந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோர, சில 'லெட்டர் பேட்' கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட ஆரம்பித்துள்ளன.

 இந்த நிலையில்தான் லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற பொதுத் தலைப்பை பயன்படுத்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு போஸ்டர் அடித்துள்ளனர் (பெரும்பாலான லிங்கா விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் யாரும் இவர்களின் போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). 

அதில்தான் இந்த குழுவின் நோக்கம், பின்னணி எல்லாமே அம்பலமாகியுள்ளது. இது லிங்கா நஷ்டஈடு கேட்கும் போராட்டம் அல்ல. மாறாக ரஜினிக்கு எதிரானது என்று பலரும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர். 

இந்த போஸ்டரில் 'சினிமாவுக்குள் அரசியல் நுழையக்கூடாது என்பார்களாம்.. ஆனால் இவர்கள் மட்டும் குறிப்பிட்ட கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பார்களாம்... இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது, என்று சொன்னவருக்கு ஸ்ரீரங்கத்து அரங்கநாதரே உங்களை அங்கீகரித்துவிட்டார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை...' என்று போகிறது அந்த போஸ்டர் வாசகங்கள். 

அதாவது ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டிவிடுகிறார்களாம்! ஆக இவையெல்லாம் தெள்ளத் தெளிவாக ரஜினியின் செல்வாக்குக்கு எதிரான செயலாகவே பார்க்கப்படுகிறது. '

இவர்கள் வர்த்தகம் செய்தது வேந்தர் மூவீஸ், ஈராஸ் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷுடன். ஆனால் அங்கெல்லாம் போகவில்லை. அவர்களின் முகவரி தெரியவில்லையா இவர்களுக்கு? 

 ரஜினியை அவமதிப்பதுதான் இவர்கள் நோக்கம். அவரது சினிமா மற்றும் அரசியல் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக முடக்க சிலர் செய்யும் சதியின் முகங்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் முன் இப்போது அம்பலப்பட்டு விட்டார்கள்' என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

 யார் இந்த சிங்கார வேலன்? 

விதம் விதமாக, ரகம் ரகமாக போராட்ட நோட்டீஸ் போட்டு வரும் இந்த குழுவின் தலைவராக செயல்படும் சிங்காரவேலனின் பின்னணி கதைகள் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவர ஆரம்பித்துள்ளன. 

இன்று ரஜினிக்கு எதிராக, மக்களின் முதல்வருக்கு நோட்டீஸ் அடித்த இதே சிங்காரவேலன், சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மக்கள் முதல்வரை கடுமையாகச் சாடி அளித்த பழைய பேட்டிகளை எடுத்து வெளியிட்டுள்ளன மீடியாக்கள். 

குறிப்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அளித்த பேட்டியில், "தளபதியே அடுத்த முதல்வர். உலகமெங்கும் குடும்ப ஆதிக்கம் ஓங்கியிருக்கும் போது திமுகவை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்? அம்மையார் ஆட்சியில் அவருக்கு எவ்வித ரத்த பந்தங்களும் இல்லாதவர்கள் மண்டலவாரியாக ஆளுமை செலுத்தினார்களே, அதற்கு என்ன பெயர் என்று அகராதியில் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று 'மக்கள் முதல்வர்' ஜெயலலிதா குறித்து ஏக வசனத்தில் பேசியிருக்கிறார். 

அது மட்டுமல்ல, இந்த சிங்கார வேலன் முன்பு திமுக சார்பில் போட்டியிட முயன்று, அங்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றவர். அந்த தேர்தலில் தன்னிடம் மொத்தமே ரூ 3 லட்சம்தான் ரொக்க, சொத்து மதிப்பு என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்திருக்கிறார். 

ஆனால் லிங்காவை ரூ 8 கோடிக்கு வாங்கியதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். இதுபற்றியும் பல கேள்விகளை மீடியா எழுப்பி வருகிறது. வருமான வரித்துறைக்கும் புகார்கள் அனுப்பி வருகின்றனர் 
சிங்காரவேலனுக்கு எதிர்த்தரப்பினர். 

சிங்கார வேலன் மீதுள்ள வழக்குகள், அவர் மீது சென்னை மேயர் சைதை துரைசாமி அளித்த புகார்கள், எஸ் ஆர் எம் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருடனான மோதல் மற்றும் சமரச கதைகள் போன்றவையும் வெளியாகியுள்ளன. 

இப்படி லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் தனக்கு எதிராக நடத்தப்படும் விஷயங்களை ரஜினிக்கு தெரிந்திருக்கிறதா... அவர் நிலைப்பாடு என்ன? அதுகுறித்து அடுத்த செய்தியில் பார்க்கலாம்!

பீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர்: முதல் மந்திரி மான்ஜி

பீகார் முதல் மந்திரியாக உள்ள மான்ஜி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், கடந்த சில தினங்களுக்கு முன் அரசு திட்டங்களுக்கு கமிஷன் பெற்றேன் என்று பரபரப்பு கூட்டினார்.

இந்நிலையில் 70 வயதான இந்த இளைஞர் கூறியுள்ள கருத்து பீகாருக்கும், இந்திய நாட்டிற்கும் எந்த வகையிலும் பெருமை சேர்க்காது. இந்தியா டுடே இதழுக்கு இந்த அறிவு ஜீவி அளித்த பேட்டியில், பீகாரில் உள்ள ஆண்களில் 2 முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களது மனைவியுடன் அவுட்டிங் செல்கின்றனர். மாறாக 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் அவுட்டிங் செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இதுபோல் பெண் நண்பர்களை வைத்துக்கொள்வதில் தவறில்லை. பாட்னாவில் உள்ள எக்கோ பூங்காவுக்கு சென்று பார்த்தால்,  திருமணமாகாதவர்கள் மட்டும் அங்கு ஜோடியாக அமர்ந்திருப்பதில்லை. திருமணமானவர்களும் ஜோடி, ஜோடியாக அமர்ந்திருப்பதை அங்கு காணலாம். பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் இணைகின்றனர். ஆகையால் அதில் தவறேதும் இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று மான்ஜி உளறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மான்ஜியின் மகன் திருமணமான போலீஸ் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது வெட்ட வெளிச்சமானது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற முதல்வர் கிடைத்தால் மாநிலம் விளங்கிடும். சரி தானே..

Monday, February 16, 2015

அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய ஏக்தா கபூரின் ட்ரிபிள் எக்ஸ் பட போஸ்டர்கள்

பாலிவுட்டில் காமத்தையும், வன்முறையையும் கலந்த படங்களை எடுப்பதில் ஏக்தா கபூரும், மகேஷ் பட்டும் முன்னணியில் உள்ளனர். சன்னி லியோனை பிரபலப்படுத்திய ராகினி எம்எம்எஸ் படத்தை தயாரித்தது ஏக்தா கபூர்தான்.

இவரது புதிய தயாரிப்புக்கு ட்ரிபிள் எக்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். கென் கோஷ் இயக்கம். அப்பட்டமான உடலுறவு காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் பார்ப்பவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை சவால்விடுகிறது இந்தி சினிமா என்று சொல்லி பெருமைப்படுகிறவர்கள், காமத்திலும் ஹாலிவுட்டை இந்தி சினிமா சவாலுக்கு இழுக்கிறது என்று பெருமையாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

சென்சார் இந்தப் படத்துக்கு என்ன சான்றிதழ் தரும்? ட்ரிபிள் ஏ தந்தாலும் இந்தப் படத்துக்கு போதுமானதாக இருக்காதே.

எனக்கென யாருமில்லையே - அனிருத்தின் சிங்கிள் வெளியானது(வீடியோ)

காதலர் தினத்தை முன்னிட்டு அனிருத் இசையமைத்த எனக்கென யாருமில்லையே பாடல் வெளியானது.

முதல் படத்திலேயே இந்தியா அறியப்படும் இசையமைப்பாளராக பிரபலமான அனிருத், ஆக்கோ என்ற தமிழ்ப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். 
ஆக்கோவின் விளம்பரங்கள் அனைத்திலும் அனிருத்தின் புகைப்படமே இடம்பெற்றது. அதனால், அனிருத் நடிக்கும் படமோ என்ற ஐயம் அனைவருக்கும். ஆனால், இசை மட்டும்தான் அனிருத்.

அக்கோ படத்தின் ஒரு பாடலை மட்டும் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டனர். எனக்கென யாருமில்லையே என்ற அந்தப் பாடல் இணையத்தில் அதிகம் பேரால் விரும்பி கேட்கப்பட்டுள்ளது.




முதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்

நேற்று முன்தினம் தனுஷின் அனேகன் திரைக்கு வந்தது. காதல் கதையை கே.வி.ஆனந்த் சுவாரஸியமாக தந்துள்ளார் எனவும், படம் கொஞ்சம் சொதப்பல் எனவும் இருவேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், வசூல் கனகம்பீரம்.

முதல்நாளில் தமிழக திரையரங்குகளில் மட்டும் அனேகன் 5.8 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது இந்த வருடம் வெளியான படங்களில் மூன்றாவது அதிக ஓபனிங் ஆகும். 

என்னை அறிந்தால் முதல் இடத்திலும், ஐ இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அனேகன் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் அமிரா தஸ்துர் நடித்துள்ள அனேகன் படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸானது. அனேகன் உலக அளவில் 701 தியேட்டர்களில் ரிலீஸானது. 

படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அனேகன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பார்ட்டி 

படம் ரிலீஸான அன்று இரவே தனுஷ் தனது நண்பர்களுக்கு வெற்றி பார்ட்டி அளித்தார். அதில் தனுஷின் தம்பி சிம்பு கலந்து கொண்டார்.

ரூ.20 கோடி 

அனேகன் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 படத்திற்கு இப்படி அமோக வரவேற்பு அளித்துள்ள உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

தனுஷ், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் ஹிட்டானது. அதையடுத்து வெளியாகியுள்ள அனேகன் படமும் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


Saturday, February 14, 2015

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்..2வது ரேங்கில் இருந்த பாண்டிங்கை முந்தினார் சங்ககாரா!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகர ரன்களை குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை கைப்பற்றியுள்ளார் இலங்கையின் குமார் சங்ககாரா. 

உலக கோப்பையின் முதல் போட்டியில் இன்று நியூசிலாந்தும்-இலங்கையும் மோதின. முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்து 331 ரன்களை குவித்த நிலையில், இரண்டாவது இலங்கை பேட்டிங் செய்தது. 

ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரத்து 693 ரன்கள் குவித்திருந்த சங்ககாராவுக்கு, பாண்டிங்கின் ரன் சாதனையை முறியடிக்க மேற்கொண்டு 12 ரன்கள் தேவைப்பட்டது. 

ஏனெனில் பாண்டிங் ஓய்வு பெறும் முன்பாக மொத்தம் 13,704 ரன்களை குவித்திருந்தார். இனிடையே, 16வது ஓவரில் ஆடம் மில்னே பந்தை பவுண்டரிக்கு விரட்டியபோது அந்த சாதனையை சங்ககாரா நிகழ்த்தினார். 

இதன் மூலம் சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை சங்ககாரா நிகழ்த்தியுள்ளார். 

சச்சின் 18 ஆயிரத்து 426 ரன்களுடன் யாரும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நம்பர்-1 இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் சங்ககாரா 39 ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. 




என்னை அறிந்தால் இரண்டாவது பாகம் - ஆர்வம் காட்டும் கௌதம், அஜீத் முடிவு என்ன ?


என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது என்று மீண்டும் கூறியுள்ளார் கௌதம்.

தோல்விகளால் துரத்தப்பட்டு தமிழ் சினிமாவின் விளிம்புக்கு சென்ற கௌதமை மீண்டும் மையத்தில் உட்கார வைத்துள்ளது, என்னை அறிந்தால். தன்னுடைய ஸ்கிரிப்டோ இயக்கமோ இதற்கு காரணமல்ல, அஜீத் என்ற நடிகரின் ஸ்டார் பவரே காரணம் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது. என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்பதே இன்று அவர்முன் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய ஆசை.


யாருக்கு எப்போது எதை செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்துகிறவர் அஜீத். 

முதுகில் அறுவை சிகிச்சை நடந்து, இனி அஜீத்தால் பழையபடி நடிக்க முடியுமா என்று கேள்வி எழுந்த நேரத்தில், ஸ்ரீ சூர்யா மூவிஸுக்காக அஜீத்தை ஒப்பந்தம் செய்திருந்த ஏ.எம்.ரத்னம் அவரை படத்திலிருந்து நீக்கினார். அந்த சோதனையில் இருந்து அஜீத் மீண்டெழுந்தார். அப்போதுதான், தவறு செய்துவிட்டோமே என்று ரத்னத்துக்கு உறைத்தது. 

அன்றிலிருந்து அஜீத்தின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பூங்கொத்து அளித்து வந்தார் ரத்னம். ஆனால் அஜீத் அவரை கண்டுகொள்ளவில்லை. ரத்னம் விரும்பியும் அவரது தயாரிப்பில் நடிக்கவில்லை. வரிசையாக படங்கள் தோல்வியுற்று, அவர் கைதூக்கிவிட்ட பிரபல நடிகர்கள் அவரை ஒதுக்கி, இனி வனவாசம்தான் என்று முடிவான நேரம் அஜீத்தே அழைத்து ஆரம்பம் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ரத்னத்துக்கு அளித்தார். ஒரே படத்தில் கடன்களை அடைத்து நிமிர்ந்தார் ரத்னம். இப்போது அவருக்கு இரண்டே சாமிகள், சாய் பாபாவும், அஜீத்தும்.

அதேபோல்தான் கௌதமும். வரிசையாக தோல்வியுற்று துருவநட்சத்திரம் படத்தை எடுத்தால்தான் வாழ்க்கை என்ற நிலையில் சூர்யா அப்படத்திலிருந்து விலக, ஆபத்பாந்தவனாக வந்து என்னை அறிந்தால் பட வாய்ப்பை கௌதமுக்கு அளித்தார். கௌதமுக்கு இப்போது அஜீத் கடவுளுக்கும் மேலே.


என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தில் கௌதம் ஆர்வம் காட்டுவதற்கும் அஜீத் மௌனம் காட்டுவதற்கும் ஸ்கிரிப்டுக்கு மேல எவ்வளவோ விஷயங்கள். ரசிகர்களுக்கு இது புரியுமா?


தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது

தனியார் பள்ளியில் தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாச படம் காட்டியதாகவும், அதை பார்க்காதவர்களை தேர்வில் ஃபெயிலாக்கி விடுவதாகவும் ஆசிரியர் ஒருவர் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஒருவர், நடந்தவற்றை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை, உடனே உள்ளூர் அரசியல் பிரமுகர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதன் அடிப்படையில், 35 வயதான அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியரிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Friday, February 13, 2015

ஓசூரில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பலி - 50–க்கும் மேற்பட்டவர்கள் காயம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர், சேலம், ஈரோடு, கோவை வழியாக தினமும் கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு இண்டர்சிட்டி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 6.15 மணிக்கு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. இன்று காலை 7.40 மணி அளவில் இண்டர்சிட்டி விரைவு ரெயில் ஓசூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் வந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

பெங்களூரில் இருந்து வந்து கொண்டு இருந்த அந்த ரெயில் ஆனைக்கல் பகுதியினை கடக்கும் போது திடீரென்று டி–8, டி–9 உள்பட 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 2 பொது பெட்டிகளும், 2 ஏ.சி. பெட்டிகளும் அடங்கும். காலை நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். திடீரென ரெயில் பெட்டி கவிழ்ந்ததால் இந்த பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். 

தடம் புரண்ட பெட்டிகளில் பயணம் செய்த 12 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 17 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பலியான 12 பேரின் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. 

சம்பவ இடத்துக்கு மத்திய மந்திரி சதானந்த கவுடா நேரில் வந்து பார்வையிட்டார். தமிழக மற்றும் கர்நாடக ரெயில்வே அதிகாரிகள் விரைந்து உள்ளனர். மேலும் இரு மாநிலங்களில் இருந்தும் 20–க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்தில் டி–9 பெட்டி தான் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளது. பயணிகள் தடம் புரண்ட பெட்டிகளுக்குள் மாட்டி கொண்டு உள்ளதால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இதுவரை 12 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கவிழ்ந்த ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரெயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி கிடப்பதால் மீட்பு படையினர் வெல்டிங் எந்திரம் மூலம் பெட்டியை உடைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து பற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு மீட்பு பணியை தொடர்ந்தனர். 

ரெயில் தடம் புரண்டதற்கு பாறை உருண்டு விழுந்ததே காரணம் என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு கூறினார். என்றாலும் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் விசாரணை முடிந்த பிறகே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்றும் அவர் கூறினார். 

பெங்களூரில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த விசாரணையை நடத்துவார் என்றும் மத்திய மந்திரி கூறினார். விபத்து நடந்த இடத்திற்கு அவர் விரைந்துள்ளார். இந்த விபத்துக்கு சதி செயல் காரணமா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயிலில் பயணித்த சில பயணிகள் கூறும் போது ‘டமார்’ என்ற சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். எனவே ரெயில் விபத்துக்கு சதி காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. 

விபத்து நடந்த இடத்துக்கு தென்மேற்கு ரெயில்வேக்கு உட்பட்ட அதிகாரிகள், பெங்களூர் ரெயில்வே கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். மேலும் ஈரோட்டில் இருந்து நவீன கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விபத்து நடந்த ரெயிலின் மற்ற பெட்டிகளில் பயணித்த பொதுமக்கள் அங்கிருந்து வீடு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர். 

இந்த விபத்தின் காரணமாக பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ரெயில்கள் மாற்றுப் பாதையில் (அதாவது கிருஷ்ணராஜாபுரம், குப்பம், திருப்பத்தூர் வழியாக) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஓசூர் மற்றும் பெங்களூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் ஆனைக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ரெயிலில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் ஆனைக்கல் விரைந்துள்ளனர்.


எலிக்கு பயந்து மே இறுதிக்குள் விஜய்யின் புலி?

இந்த கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கும் பெரிய படங்கள் என்று பார்த்தால், கமல் படம் தவிர வேறு எதுவும் இல்லை. 

கமலின் உத்தம வில்லன் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. அந்தப் படத்துக்குப் பிறகு பெரிய படம் என்று பார்த்தால் சூர்யாவின் மாஸ்தான். ஆனால் வெளியீட்டுத் தேதி முடிவாகவில்லை. 

இந்த சூழலில் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படம்தான் இப்போதைக்கு பெரிய படம். புலியை மே மாதமே வெளியிட்டுவிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். காரணம், தமிழ் சினிமாவின் பெரிய சீஸன் கோடை விடுமுறைதான். 

மே மாதம் வெளியிட்டால் ஒரு மாத காலத்துக்கு வசூலை அள்ளலாம். எனவே மே இறுதிக்குள் படத்தை வெளியிட தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்தப் படம் ஜூலையில்தான் வெளியாகும் என்று கூறி வருகின்றனர்.

விஜய் தனது புலிக்கு போட்டியாக வடிவேலுவின் எலியை கருதுவதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி எலியுடன் புலியை வெளியிட்டால் அது இணையத்தள வாசிகளிடமும் அஜித் ரசிகர்களிடமும் பெரிய கேலிக்குள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் எலியை முந்தி மொண்டு புலியை வெளியிட விஜய் உட்பட புலி படக்குழுவினர் எண்ணியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது 


இந்தியாவுக்காக பாகிஸ்தானை வீழ்த்திய 'கர்நாடகா'... ஒரு சுவாரஸ்ய பிளாஷ்பேக்!

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 3வது மோதல் பல சுவாரஸ்யங்களைக் கொண்டதாக அமைந்தது. 

இந்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து ஆடியது இந்தியாவா அல்லது கர்நாடகாவா என்ற சந்தேகம் வரும். காரணம், 

இந்தியாவின் வெற்றிக்கு இந்தப் போட்டியில் கர்நாடகத்தைச் சேர்ந்த நான்கு முக்கிய வீரர்கள்தான் காரணம். 1999ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி மான்செஸ்டரில் நடந்த சூப்பர் சிக்ஸ் போட்டியில் பாகிஸ்தானை, 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

45 ரன் எடுத்த சச்சின் 

இதில் முதலில் இந்தியா பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் சச்சினும், சடகோபன் ரமேஷும். ரமேஷ் 20 ரன்களில் கிளம்பிப் போக, சச்சின் 45 ரன்கள் வரைத் தாக்குப் பிடித்தார்.

ராகுல் டிராவிடும், கேப்டன் அஸாருதீனும்தான் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடி ரன் குவித்தனர். டிராவிட் 119 பந்துகளைச் சாப்பிட்டபோதும் 61 ரன்களை எடுத்தார். அஸார் பங்கு 59 ஆகும்.

227 ரன்களுக்கு ஆட்டம் ஓவர்

 50 ஓவர்கள் வரைத் தாக்குப் பிடித்து விட்ட இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்தது.  

பதம் பார்த்த பிரசாத் - ஸ்ரீநாத் 

அடுத்து ஆட வந்த பாகிஸ்தானை இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் வெங்கடேச பிரசாத்தும், ஸ்ரீநாத்தும் பதம் பார்த்து விட்டனர். சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளேவும் தன் பங்குக்கு நொங்கெடுத்து விட்டார்.  

பாகிஸ்தான் வீரர்களை அரை சதம் போட விடாத அளவுக்கு அடுத்தடுத்து விக்கெட்களைச் சாய்த்தது இந்தியா.  

இன்சமாம் உல் ஹக் கடுமையாக போராடி 41 ரன்களை எடுத்தார். சயீத் அன்வர் 36 ரன்களுக்கு விழுந்தார். மொயின் கான் 34 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் மட்டையாகி விட்டனர். இதனால் 45.3 ஓவரிலேயே 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான்.

உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு, பாகிஸ்தானுக்கு எதிராக இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.  

5 விக்கெட் சாய்த்த வெங்கடேச பிரசாத் வெங்கடேச பிரசாத் புயல் வேகத்தில் பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். ஸ்ரீநாத் தன் பங்குக்கு 3 விக்கெட்களைக் காலி செய்தார். மிச்சம் இருந்த 2 விக்கெட்களையும் கும்ப்ளே எடுத்தார்.

கர்நாடக நாயகர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்த ராகுல் டிராவிட், பிரசாத், ஸ்ரீநாத், கும்ப்ளே ஆகியோர் இணைந்து இந்தியாவுக்காக பிரமாதமான வெற்றியைத் தேடித் தந்தது சுவாரஸ்யமான ஒற்றுமையாக அமைந்தது. ஆட்ட நாயகனாக வெங்கடேச பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது உலகை அச்சுறுத்திய பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தருக்கு இதுதான் முதல் உலகக் கோப்பைப் போட்டியாகும்.


Thursday, February 12, 2015

ஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் தங்கி என்ஜினீயர் வேலை பார்த்து வருகிற தனது மகனை பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ் பாய் படேல் (வயது 57) சென்றுள்ளார்.

கடந்த 6–ந் தேதி அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்துள்ளார். இதைக்கண்ட ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒரு நபர் நடமாடுகிறார் என போலீசில் புகார் செய்து விட்டார்.

இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க போலீசார், ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டனர். அவருக்கோ ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று மட்டும் கூறி உள்ளார். உடனே ஒரு போலீஸ்காரர் அவரை பிடித்து தரையில் தள்ளிவிட்டார். இதில் அவர் முடங்கிப்போகிற அளவுக்கு காயம் அடைந்தார். இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

இது தொடர்பான புகாரில், அவரை தள்ளிவிட்ட போலீஸ்காரர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

இதுபற்றி சுரேஷ் பாய் படேலின் மகன் சிராக் கூறுகையில், ‘‘எனது அப்பா ஓய்வில் இருக்கும் போது அந்த பகுதியை நடந்து சென்று பார்த்திருக்கிறார். இது வழக்கமான செயல்தான். என் அப்பாவுக்கு இந்தியும், குஜராத்தியும் தான் தெரியும். ஆங்கில மொழி தெரியாததால் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார். இப்போது சுரேஷ் பாய் படேலை இந்த நிலைக்கு தள்ளிய மேடிசன் போலீஸ் மீது வழக்கு தொடர சிராக் திட்டமிட்டுள்ளார்


டெல்லி: 70 எம்.எல்.ஏ.க்ககளின் அதிர்ச்சி பின்னணி! ஒரு சிறப்பு பார்வை !!

டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் கோடீசுவரர்கள்; 24 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
குற்றப்பின்னணி எம்.எல்.ஏ.க்கள்

டெல்லி சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்களின் கல்வித்தகுதி, நிதி நிலைமை, குற்ற வழக்குகள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

* 70 எம்.எல்.ஏ.க்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 23 பேர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள். ஒரே ஒரு எம்.எல்.ஏ. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்.

(முந்தைய சட்டசபையில் 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. ஆக, புதிய சட்டசபையில் குற்றப்பின்னணி உடைய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது.)

கோடீசுவர எம்.எல்.ஏ.க்கள்

* புதிய எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். இவர்களில் 11 பேர் ரூ.10 கோடிக்கு அதிகமான சொத்துக்களை உடையவர்கள். எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.29 கோடி ஆகும். (முந்தைய சட்டசபையில் 51 எம்.எல்.ஏ.க்கள் கோடீசுவரர்கள். ஆக இந்த முறை கோடீசுவர எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பும் ரூ.10.83 கோடியிலிருந்து ரூ.6.29 கோடியாக சரிவு கண்டுள்ளது.)

கல்வித்தகுதி

* புதிய எம்.எல்.ஏ.க்களில் 12-ம் வகுப்பும், அதற்கு கீழும் படித்து தேறியவர்கள் 24 பேர். பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் 43 பேர்.

(முந்தைய சட்டசபையில் 12-ம் வகுப்பும், அதற்கு கீழும் படித்து தேறியவர்கள் 33 பேர், பட்டதாரிகள் 36 பேர். ஆக இந்த முறை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மட்டும் குறைந்துள்ளது.)

வயது-பாலினம்

* புதிய எம்.எல்.ஏ.க்களில் 25-50 வயது பிரிவினர் 49 பேர். 50-70 வயது பிரிவில் உள்ளவர்கள் 20 பேர். (முந்தைய சட்டசபையில் 25-50 வயது பிரிவினர் 40 பேர். 50-70 வயது பிரிவினர் 28 பேர். ஆக இந்த முறை 50-70 வயது பிரிவினர் எண்ணிக்கை மட்டும் குறைந்துள்ளது.)

* புதிய எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் மட்டுமே பெண்கள். (முந்தைய சட்டசபையில் 3 பேர் பெண்கள். ஆக பெண் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை இப்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது.)

கவுதமி மகளுக்கு ஸ்ருதி ஹாசன் நிபந்தனை

கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா நடிகைகளாக வலம் வரத் தொடங்கிவிட்டனர். கமலுடன் வாழ்ந்து வரும் கவுதமி நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். 

அவரும் ‘பாபநாசம்‘ படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்து திரையுலகுக்கு ரீஎன்ட்ரி ஆகி இருக்கிறார். கவுதமி மகள் சுப்புலட்சுமி. அவரும் வளர்ந்து நிற்கிறார். 

அவருக்கும் நடிக்கும் ஆசை வந்திருக்கிறதாம். தனது விருப்பத்தை அவர் கவுதமியிடம் சொன்னதும் அவர் ஊக்கம் கொடுத்ததுடன் அட்வைஸும் தந்தார். 

ஸ்ருதி ஹாச னை உனது ரோல் மாடலாக எடுத்துக்கொள். அவர் கூறும் அறிவுரைகளை ஏற்று அதன்படி நடந்துகொள் என்று கவுதமி கூறி இருக்கிறார்.

 இதற்கிடையில் சுப்புலட்சுமிக்கு வாழ்த்து சொன்ன ஸ்ருதி ஹாசன், நடிக்க வருவதற்கு முன் உன் பெயரை மாற்றிக்கொள் என்று சுப்புலட்சுமிக்கு நிபந்தனை விதித்திருக்கிறாராம். 

சுப்புவை கோலிவுட்டில் அறிமுகம் செய்தால் பிரபலப்படுத்த முடியாது. ஸ்ருதி, அக்ஷராவை போல் பாலிவுட்டிலேயே அறிமுகப்படுத்தி, அதன்பிறகு தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க வைக்கலாம் என கவுதமிக்கு அவரது சினிமா தோழிகள் யோசனை சொல்கிறார்களாம்.



என்னை அறிந்தால் அஜித் ரசிகர்களின் அன்பை இன்னும் மறக்காத அருண் விஜய்

என்னை அறிந்தால் படத்திற்காக உடம்பை கட்டுகோப்பாக வைத்து கடினமாக உழைத்திருந்தார் அருண்விஜய்.அவரது  உழைப்பு வீண் போகவில்லை. எதிர்பார்த்தது போலவே, அருண்விஜய்க்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த படத்தில் அருண் விஜயின் கேரக்டர் பேசப்பட்டது.ரசிகர்கள் இடையே அருண் விஜய்க்கு ந்ல்ல வரவேற்பு உள்ளது. 

இதுவரை நாயகனாக மட்டுமே நடித்து வந்த அருண்விஜய், என்னை அறிந்தால் படத்தில் தான் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார்.அதில் அவர் பெயர் விக்டர்.

இப்படத்தை இவர் முதல் நாள் சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் அதிகாலையே கண்டு கழித்தார். படம் முடிந்து வெளியே வருகையில் ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தால் அவர் கண் கலங்கியது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இந்த வீடியோ இன்றும் வலம் வரும் பேஸ்புக்கில் இந்திய அளவில் அருண் விஜய் ட்ரண்ட் ஆகியுள்ளார்.

நடிகர் அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தின் பச்சை தனது முதுகு பகுதியில் குத்தி உள்ளார். இறக்கைகளுடன் கூடிய விக்டர் டிசைனில் பச்சை குத்தி உள்ளார்.

அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மற்றும் அன்பின் வெளிப்பாடாகவே அருண் விஜயின் இந்த பச்சை குத்துதலை அஜித் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ அடித்த படத்திற்கு அஜித் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தால் போதும் .


கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் 2 ந்தேதி வெளியாகிறது

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்–2, உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் வரிசையாக உள்ளன. இதில் எந்த படம் முதலில் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அனைத்து படங்களிலும் கமல்ஹாசன் நடித்து முடித்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இவை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன. அடுத்து அமீர் கான் நடித்து வெளியான பிகே படத்தின் தமிழ்- தெலுங்கு ரீமேக்கிலும் கமல்ஹாசன் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘உத்தம வில்லன்’. இதில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்

உத்தமவில்லன் தான் முதலில் வர இருக்கிறது என கமலே தெரிவித்து இருந்தார். 

‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில், ‘உத்தமன்’ என்ற 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்.

மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் குருவான சினிமா இயக்குனராக கே. பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள்.

8-ம் நூற்றாண்டில் நடக்கும் ‘உத்தம வில்லனில்’ நடக்கும் கதையில் மன நோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21-ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆன்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8-ம் நூற்றாண்டு கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசர், ஜேக்கப் சக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராம், இவரின் வளர்ப்பு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி மேனன், சொக்கு செட்டியார் என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் இசைவெளியீட்டை மார்ச் 1-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

ரஜினிகாந்தின் லிங்கா வெளியீடு உரிமையை வாங்கிய ஈராஸ் நிறுவனமே தற்போது கமல்ஹாசனின் உத்தம வில்லன் வெளியீடு உரிமையை வாங்கி உள்ளது.உத்தம வில்லான் வருகிற ஏப்ரல் 2 தேதி வெளியாகும் என்று ஈராஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

Wednesday, February 11, 2015

அடுத்து தனுஷை இயக்கும் கௌதம்

ஆம், கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். ஆனால் அது சினிமா அல்ல, விளம்பரம்.
இந்தியில் நடிக்க ஆரம்பித்தபின் அதிக விளம்பரங்கள் தனுஷை தேடி வருகின்றன. விளம்பர விஷயத்தில் அவர் இந்தி நடிகர்களைப் போலவே நடந்து கொள்கிறார். எதையும் விடுவதில்லை.

தனுஷ் நடித்த சென்டர் ஃப்ரெஷ் விளம்பரத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். அதையடுத்து 7 அப் விளம்பரத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

இந்த விளம்பரத்தை எடுக்கப் போகிறவர் கௌதம். இவர்கள் - சினிமாவோ, விளம்பரமோ - ஒன்றாக இணைந்து பணிபுரிவது இதுவே முதல்முறை. இந்த கூட்டணி சினிமாவிலும் தொடருமா? 

காலம் பதிலளிக்க வேண்டிய கேள்வி.


என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?

என்னை அறிந்தால் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து ஒருவழியாக ஓய்ந்துள்ளன. இப்போது படத்தின் பிஸினஸ் பற்றி பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்துள்ளனர். 

சிலர் படம் பிரமாதமான வெற்றி என்றும், சிலர் அப்படியெல்லாம் இல்லை... சராசரிதான் என்றும் கூறி வருகின்றனர். தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் இதுபற்றி எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார். 

அவர் எப்போதுமே அப்படித்தான். பெரிய வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் மவுனம்தான் அவர் பதில். சரி படம் உண்மையில் எப்படிப் போகிறது? நன்றாகவே ஓடுகிறது. வசூலும் திருப்தியாக உள்ளது. 

என்னை அறிந்தால் படம், வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் ரூ 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது மொத்தமாக. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 40 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. 

இந்தப் படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது, இது உண்மையிலேயே நல்ல வசூல்தான். வரி போக ரூ 28 கோடி வரை கிடைத்திருக்கிறது. பிற மாநிலங்களில் கேரளா, கர்நாடகாவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. 

சர்வதேச அளவில் அமெரிக்காவில் 4 லட்சம் டாலருக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம். 

மொத்தமாக ரூ 60 கோடிக்கும் மேல் வசூலித்து, டீசன்டான வெற்றியைப் பெற்றுள்ளது என்னை அறிந்தால். தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் சந்தோஷமாக அஜீத்தின் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.


"காஜல் அகர்வாலு"க்கு 'ஆழ்ந்த நன்றி' சொன்னாரா கேப்டன்?

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றி பாரதிய ஜனதா, காங்கிரஸை மண்ணை கவ்வியது போதும்.. சமூக வலை தளங்களில் கமெண்டுகள் படுபரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றன. 

ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, தமிழகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நடிகை குஷ்பு என பலரையும் கலாய்த்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.. 

இந்த வகையில் தே.மு.க. தலைவர் விஜயகாந்தையும் விட்டு வைக்கவில்லை இந்த குசும்பர்கள்.. இப்படி யாரோ குசும்பர் பார்த்த போட்டோஷாப் வேலைதான் இது.. 

அண்மையில் ஒபாமா இந்திய வருகையை விஜயகாந்திடம் அவரது மனைவி பிரேமலதா கூறுவதாகவும் அதற்கு உங்க அப்பா வருகிறாங்கன்னு சொன்னியே என கேப்டன் கேட்பதாகவும் வலைதள குசும்பர்கள் விளையாடினர். 

இப்போது கேப்டன் அரவிந்த் கேஜ்ரிவாலை உச்சரித்தால் 'காஜல் அகர்வால்' என்றுதான் சொல்வார் என குசும்பாக சித்தரித்திருக்கின்றனர். 

மொபைலில் இலவச இணைய வசதி: ஃபேஸ்புக் வழங்குகிறது

ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை அளிக்க உள்ளது. 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்பட உள்ளது. இதன்படி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் இலவச இணையதள வசதியை பெற முடியும். 

இத்திட்டத்தின் மூலம் ஆரம்பத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

இதே போன்ற இலவச சேவையை ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவன வாடிக்கையாளர்களுக்குத் தருவது குறித்தும் பேசி வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

உலகில் 500 கோடி வாடிக்கையாளர்களை பெற இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி என்ற பிரமாண்ட திட்டத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இலவச இணைய வசதி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை ஏற்கனவே ஆஃப்ரிக்க நாடுகளில் ஃபேஸ்புக் செயல்படுத்த தொடங்கிவிட்டது.


அட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடி?

கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். விஜய் புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடாத படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. பிறகு பாலிவுட்டின் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது விஜய்யை மீண்டும் வலைத்து போட்டுள்ளார் சமந்தா. ஆம் விஜய்யின் 59வது படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. இதன் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேரவிருக்கிறார். மேலும் படத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. புலி படம் முடிந்தவுடனே தனது 59வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு: தனுஷ் அறிவிப்பு


'இரண்டாம் உலகம்' தோல்விக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் விறுவிறுப்பான ஒரு காதல் கதையை தயார் செய்து, அதில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சிம்பு-த்ரிஷாவை ஜோடியாக்கி புதிய படம் ஒன்றை இயக்க முயற்சி மேற்கொண்டார். படத்துக்கு கூட அலைவரிசை என்று தலைப்பு வைத்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் ஆரம்பிக்கப்படவில்லை. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, காரணம் எதுவும் சொல்லாமலேயே படத்தை கைவிட்டனர். இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இதை தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டரில் கூறியதாவது, ''அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படம் மிக சிறப்பானதாக அமையும். சகோதரர்களுக்கு வாழ்த்துகள்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கிய சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆஃபீசில் வெற்றி பெறாததால், இப்படத்தை ஒரு வெற்றிப்படமாக தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செல்வராகவன், அதற்கேற்ற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறாராம். மேலும் படத்தின் நாயகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அலைவரிசை படத்தில் ஒப்பந்தமான த்ரிஷாவும், யுவனும் படத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்


என்னை அறிந்தால் கௌதமின் திரைவாழ்க்கையில் நல்ல ஓபனிங்கை மீண்டும் பெற்றுத் தந்திருக்கிறது. கௌதம் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

என்னை அறிந்தால் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விக்ரமிடம் ஒரு கதை கூறியிருக்கிறார் கௌதம். அது அவருக்குப் பிடித்துள்ளது. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படம் முடிந்ததும் கௌதம் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் விக்ரம்.

கௌதம் தற்போது சிம்புவை வைத்து தொடங்கிய படத்தை முடிப்பதில் தீவிரமாக உள்ளார். குறுகியகால தயாரிப்பான இது இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதையடுத்து அவர் விக்ரமை இயக்குகிறார்.


பா.ஜ, காங்கிரசுக்கு அதிர்ச்சி தோல்வி ஏன்?

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து பாஜ வெற்றி பெற்றது. இந்த சூழலில் டெல்லியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தலைநகரமான டெல்லியில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜ தீவிரம் காட்டியது. 

அதே நேரத்தில் கடந்த முறை பெரும்பான்மை பலம் இல்லாமல் தவற விட்ட ஆட்சியை தற்போது எப்படியும் பிடித்து விடுவது என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மியும் களம் இறங்கியது. இம்முறை வெளிப்படையாக பாஜவுக்கும் ஆம் ஆத்மிக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது. டெல்லியில் ஏற்படும் தோல்வி பாஜவுக்கு மிகவும் கசப்பான மருந்து. அது மோடி அரசு மீதான விமர்சனமாக எதிர்க்கட்சிகளால் திசை திருப்பி விட வாய்ப்புள்ளது என்று பாஜ மிகவும் கலக்கத்துடனேயே தேர்தலை எதிர்கொண்டது. 
உடைந்தது இமேஜ்:

வெற்றி நாயகன் என்று கடந்த மக்களவை தேர்தல் முதல் கடந்த 3 மாநில சட்டமன்ற தேர்தல் வரை பேசப்பட்ட அமித்ஷா தலைமையிலும், பாஜவின் அலையை நாடு முழுவதும் வீச செய்த அக்கட்சியின் நட்சத்திர தலைவர் பிரதமர் மோடியின் பிரசாரத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து பாஜ தேர்தல் வியூகங்களை வகுத்தது. இதற்காக ஆம் ஆத்மியின் பக்கம் இருந்த அதிருப்தி தலைவர்கள் பாஜ பக்கம் ஈர்க்கப்பட்டனர். குறிப்பாக அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி, முன்னாள் தலைவர் ஷாஜியா இல்மி மற்றும் அன்னா ஹசாரேயுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் பணியாற்றிய கிரண் பேடி பாஜ பக்கம் சாய்ந்தனர். மேலும் இரும்பு நங்கை, சுத்தமான கைகளுக்கு சொந்தக்காரர் என்ற இமேஜூடன் கெஜ்ரிவாலுக்கு போட்டியாக கிரண் பேடி பாஜவின் முதல்வர் வேட்பாளராகவும் களம் இறக்கப்பட்டார். கட்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் தேர்தல் நேரத்தில் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது பா.ஜ. கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கட்சியினரே தலைமைக்கு தகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டனர்.

மேலும் பாஜவின் வெற்றிக்காக மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், டெல்லியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோர் தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே அல்லும் பகலும் அயராது பாடுபட்டனர். மேலும் பாஜ ஆளும் மாநில முதல்வர்களும் பிரசாரத்தில் களம் இறக்கப்பட்டனர். ஆனால், ஆம் ஆத்மி எத்தகைய விமர்சனத்திற்கும் களங்காமல் தெளிவாக பாஜவின் அத்தனை வியூகங்களையும் உடைத்து நொறுக்கியபடி மக்கள் முன்பாக தன்னை காட்டியபடி முன்னேறியது. மேலும் ஆம் ஆத்மி வெளிப்படையான கோஷங்களையோ, மக்களுக்கு புரியாத கொள்கைகளையோ அறிவிக்காமல் நேரடியாக டெல்லி வாசிகளின் பிரச்னைகளின் மீது கவனம் செலுத்தியது. குறிப்பாக மின் கட்டண மானியம், குடிநீர் பிரச்னை, முறைப்படுத்தப்படாத குடிசை பகுதிகள், மற்றும் காலனிகள் விவகாரம், வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை முன்வைத்து மக்கள் மத்தியில் பேசியது. தலைநகரில் அரசியல் வாதிகளின் விஐபி கலாசாரத்தால் வெறுத்து போயிருந்த டெல்லி வாசிகளுக்கு ஆம் ஆத்மி வருகை மிகவும் பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனவே ஆம் ஆத்மி மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது.

அதே நேரத்தில் ஆள் பலம், படை பலம்,  பண பலம் என பிரமாண்டமாக பாஜ களம் இறங்கியது. பிரதமர் மோடி 4 இடங்களில் தனது வழக்கமான பாணியில் வளர்ச்சி மற்றும் நிலையான ஆட்சி என்று பிரசாரம் செய்தார். கெஜ்ரிவால் அரசியல் முதிர்ச்சியற்றவர் என்றும், டெல்லியை ஆட்சி செய்ய அரசியலில்  போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் பேசினார். ஆனால், கடந்த 100 நாட்களாக மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதை டெல்லிவாசிகள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். கருப்பு பணத்தை மீட்பது, விஐபி கலாசாரம், மதவாத சக்திகளை கட்டுக்குள் வைப்பது உள்ளிட்டவை குறித்து மத்திய அரசின் மீது அதிருப்தி காணப்பட்டது. 

பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர் பிரக்யா சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்டவர்கள் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசியது, இந்துத்துவா அமைப்புகள் சிறுபான்மையினரை மீண்டும் மதம் மாற்றியது, தேர்தல் நேரத்தில் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவையும் பாஜவின் தோல்விக்கு வழி வகுத்தது.  மேலும் கடந்த ஆட்சியில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல், பெண்கள் மீதான பலாத்காரம் உள்ளிட்டவற்றால் டெல்லி மக்கள் அவதிப்பட்ட போது, அதற்கு புதிய பாஜ அரசு எதுவும் செய்யவில்லை. இந்த உணர்வுகளை ஆம் ஆத்மி மிகவும் சாதுர்யமாக தன்வசம் ஈர்த்தது. 


* மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தபின்னர் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், பிரதமர் மோடியின் பேச்சு மட்டும் எங்கும் ஒலித்தது. செயல்பாடு என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.

* பா.ஜ.வில் ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆதரவு அமைச்சர்கள், எம்.பி.க்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், செயல்பாடுகள் மதச்சார்பின்மையை அசைத்து பார்த்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தவறிவிட்டார். இதுவே கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்ற கருத்தும் நிலவுகிறது. 
  
* மக்களவையில் பெரும்பான்மை பெற்றுவிட்டோம், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அரசு நினைத்ததை தன்னிச்சையாக செயல்படுத்த முடியவில்லையே என்ற எண்ணத்தில் மாநிலங்களவையில் கட்சியின் பலத்தை அதிகரிக்க பா.ஜ. முயற்சி செய்தது.

* இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி சில மாநிலங்களில் வெற்றியையும் பெற்றது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

* சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்தியும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடுத்தியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. ஆனால், பா.ஜ.வின் போக்கில் மாற்றம் இல்லாததால் டெல்லி வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். 

* நாட்டில் அன்றாட மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் வாய் பேச்சால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தார் மோடி. ஆனால், டெல்லியில் அவரது மோடி வித்தையை வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர்.



அனேகனுக்கு வந்திருக்கும் சிக்கல் சோதனைக்கா ? சாதனைக்கா ?

எந்தப் படம் வெளியானாலும் எதிர்ப்பது என்று, இந்து மக்கள் கட்சி காவி கட்டிக் கொண்டு திரிகிறது. இந்த தலைவலியால் படத்தில் யாரை சித்தரித்திருந்தாலும் உடனே போராட்ட அறிவிப்பு வெளியிடுவது பேஷனாகிவிட்டது.

உதாரணமாக ஒரு பிச்சைக்காரனை படத்தில் காண்பித்தால், டேய், நாம பிச்சை எடுக்கிற மாதிரி படத்துல சீன் வச்சு நம்மை கேவலப்படுத்திட்டாண்டா என பிச்சைக்காரர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு வெளியிடுகிறது. 

அனேகன் படம் வரும் 13 -ஆம் தேதி வெளியாகிறது. படத்தில் சலவைத் தொழிலாளி பற்றி ஏதோ காட்சி உள்ளதாம். நம்மை கேவலப்படுத்திட்டாங்க. அந்தக் காட்சியை மட்டும் நீக்கலை, குடும்பத்தோடு அனேகன் ஓடுற தியேட்டர்கள் முற்றுகைதான் என்று சலவைத் தொழிலாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அனேகனுக்கு இலவச விளம்பரம் என்று சமாதானப்பட வேண்டியதுதான்.



பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: தேர்வு துறை

 பிளஸ் 2 வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வர தடைவிதிப்பது குறித்து தேர்வு துறை  பரிசீலனை செய்து வருகிறது. பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் புதுச்சேரியில் 5,600  பள்ளிகளை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் இத் தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு விடைத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்  பக்கத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்களையோ, பாடங்களையோ எழுத வேண்டியதில்லை. அனைத்தும் விடைத்தாளில் அச்சிட்டே வழங்கப்படுகிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை மட்டும் முதல் பக்கத்தில் பதிவு செய்தால் போதும். 

மேலும், விடைத்தாள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்துக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படு கிறது. கேள்வித்தாளில் இடம் பெறும் பயிற்சிக்கான  படங்கள், விடைத்தாளில் இணைக்கப்பட்டே வழங்கப்பட உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு நேரத்தில் கடை பிடிக்க வேண்டியவை குறித்து  விடைத்தாளின் இரண்டாம் பக்கத்தில் அச்சிடப்பட்டுள் ளது. அதன்படி மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது.  தேர்வு எழுதும்  மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு அறையில் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வருவதை தடை செய்யவும் தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. கடந்த  ஆண்டு ஷூ, பெல்ட், டை அணிந்து வர அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் இந்த ஆண்டு ஷூவை  தேர்வு அறைக்கு வெளியில் கழற்றி வைத்து விட்டுத்தான் வர வேண்டும் என்று அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அறிவியல்,  கணக்கு, வணிக கணிதம், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் முக்கிய விடைகள் மற்றும் வரைபடங்களை ஸ்கெட்ச்  பேனா, கலர் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தி போடுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு அவற்றுக்கும் தடை வருகிறது. விடைத்தாளில் எழுதப்படும் விடைகளின் கீழ் அடிக்கோடு இடக்கூடாது. குறிப்பாக ஸ்கெட்ச் பேனா, கலர்  பென்சில் ஆகியவற்றால் அடிக்கோடு இடுவது, சிவப்பு மையால் அடிக்கோடு இடுவது ஆகியவற்றுக்கும் தடை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. விடைத்தாளில்  மொத்தமாக ஒதுக்கப்பட்ட பக்கங்களுக்கு உள்ளாகவே விடைகளை எழுத வேண்டும். 


காதல் கசந்தது - நயன்தாரா


சிம்பு, பிரபு தேவா என இரு காதல்கள் தோல்வியில் முடிந்ததால் காதலே போ போ... என்ற மனநிலைக்கு நயன்தாரா வந்திருக்கிறார். இனி காதல் இல்லை, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கயிருப்பதைத் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் நயன்தாராவிடம் திருமணம் குறித்து கேட்கின்றனர். இருவரும் ஒரே நேரத்தில் திரையுலகுக்கு வந்தவர்கள் என்பதால் இந்த கேள்வி.

திருமணம் குறித்து நயன்தாரா பின்வருமாறு கூறியுள்ளார்.

என் பெற்றோர் என்னை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். என் உணர்வுகள் பற்றியும் விருப்பங்கள் பற்றியும் அவர்களுக்கு தான் அதிகம் தெரியும். அவர்களை நான் நம்புகிறேன். எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையையும் அவர்களே தேர்வு செய்வார்கள். நல்ல மாப்பிள்ளை வேண்டும். அந்த பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டேன். அவர்கள் முடிவு செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன். 

நல்ல முடிவு. கொஞ்சம் முன்பே இதை எடுத்திருந்தால் இரண்டு தோல்விகளிலிருந்து தப்பித்திருக்கலாம்.


Tuesday, February 10, 2015

தோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கிரண் பேடி பல்டி!

டெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி கூறியுள்ளார். 

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வியடைந்துள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் இந்த தேர்தல் தோல்விக்கு பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியை நிறுத்தியதும் ஒரு முக்கிய காரணம் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

இதனிடையே தேர்தல் முடிவு இன்று காலை வெளியாக தொடங்கிய சிறிது நேரத்திலேயே பா.ஜனதாவின் தோல்வி உறுதியானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி, தேர்தல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறினார். 

இது குறித்து அவர் கூறுகையில்:

 "கட்சி வெற்றி பெற்றால் இது கூட்டு வெற்றியாகும். கட்சி தோல்வி அடைந்தால் அது தனிநபர் பொறுப்பு. நான் பொறுப்பு ஏற்றுக் கொள்வேன். நான் போலீஸ் அதிகாரியாக இருந்தபோதும் தோல்வியை சந்தித்து இருக்கிறேன், பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வேன்" என்றார்.

இவ்வாறு கூறிய சில மணி நேரத்திலேயே, முதலில் கூறிய கருத்துக்கு மாறாக, டெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் மாற்றிக் கூறினார்.  

"என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டேன். பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அது தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்" என கிரண் பேடி மேலும் கூறினார்.

பா.ஜ.வை டெல்லி மக்கள் விளக்குமாற்றால் விரட்டியுள்ளனர்: வைகோ கருத்து!

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, பாரதிய ஜனதா கட்சியை மக்கள் விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள் எனக் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் மிகச்சரியான பாடம் கற்பித்துள்ளார்கள்.

சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜென்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.

நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி. டெல்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது. 

இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த டெல்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை டெல்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன.

மக்கள் ஆதரவை இழந்துவிட்ட நரேந்திர மோடியின் மத்திய அரசு பதவி விலக வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் பெருமையை மேலும் உயர்த்த, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டும். 

5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறதே என சிலர் கேட்கலாம். ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஒரு அசாதாரணமான நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து, ஆணிவேரை அறுக்கும் வேலையில் மோடி அரசின் முழு ஆதரவுடன் இந்துத்துவ சக்திகள் பாசிசத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வரும் அனைத்து அரண்களையும், குறிப்பாக மதச்சார்பற்ற தன்மையையும் நிர்மூலமாக்க பாரதிய ஜனதா கட்சியின் சங் பரிவாரங்கள் மூர்க்கத்தனமாகக் கொக்கரிக்கின்றன. இதற்கு மேல் மத்திய அரசாக நரேந்திர மோடியின்  பாரதிய ஜனதா அரசு நீடிப்பது ஜனநாயகத்தை நசுக்கும் பாசிச அடக்குமுறை நாட்களாகவே ஒவ்வொரு நாளும் கடக்கும்.

எனவே நரேந்திர மோடி அரசு தானாக விலகாவிட்டால் அந்த அரசுக்கு எதிராக மக்களின் மவுனப்புரட்சியை முன்னெடுக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் அறவழியில் போராட்டங்களை விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்துக் களங்களிலும் தொடர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பிகே தமிழ் ரீமேக்கில் கமல்?

அமீர் கான் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ’பிகே’. இந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எல்லா பகுதிகளிலும் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்தது. இந்தப் படத்தினை தமிழில் ரீமேக் செய்து கமல் ஹாசனை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்த ’முன்னாபாய் M.B.B.S’. மற்றும்  ‘3 இடியட்’ போன்ற படங்களை முறையே ‘வசூல் ராஜா M.B.B.S’ மற்றும் ‘நண்பன்’ என்று தமிழில் ரீமேக் செய்து ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.  இதைத் தொடர்ந்து ஜெமினி ஃபிலிம் நிறுவனமே பிகே படத்தினையும் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கின்றனர்.

கமல்ஹாசன் தான் அமீர்கான் நடித்த வேடத்திற்கு சரியான பொருத்தம் என்று ஜெமினி ஃபிலிம் நிறுவனம் அவரை படத்திற்கு கேட்டு வருகிறது. கமல்ஹாசன் இன்னும் உறுதியாக நடிப்பதாக தெரிவிக்கவில்லை. படத்தின் மற்ற வேடத்திற்கான தேர்வுகள் நடைபெற்றுவருகின்றனர்.

அமீர் கான் நடிப்பில் வெளிவந்த ‘பிகே’, இந்தியாவிலேயே வசூல் மற்றும் விமர்சனம் என  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூடநம்பிக்கைகளை கிண்டலடித்து சிந்திக்கவும் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புகளும் வலுத்தது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தற்பொழுது ‘உத்தமவில்லன்’ மற்றும் ‘பாபநாசம்’ படங்களில் வெளியீட்டில் பரபரப்பாக இயங்கி வருகிறார். ’பிகே’ படத்தில் இவர் நடிக்கிறாரா என்பது குறித்த செய்தி விரைவில் வெளிவரும். 


சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்!


துடைப்பம்தான் எங்கள் கட்சியின் சின்னம். அரசியலில் நிறைந்துள்ள ஊழலை இந்த துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன்!' -2012ம் ஆண்டு இறுதியில் கட்சியை துவங்கி, 2013ம் ஆண்டு முதன் முதலாக டெல்லி சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி அறிவித்த போது, பலரும் இதை கிண்டலடித்தனர்.
துடைப்பத்தை கூட கெஜ்ரிவால் விடவில்லையா? என தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி வெளிப்படையாகவே கிண்டல் அடித்தார். ஆனால் அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், வெற்றி பெற்று, டெல்லியின் முதல்வரானார் கெஜ்ரிவால். இப்போது மீண்டும் கெஜ்ரிவாலின் எழுச்சியும், துடைப்பத்தின் வெற்றியும் விஸ்வரூபம் எடுத்து தொடர.. இரண்டாவது முறை முதல்வராக இருக்கிறார் கெஜ்ரிவால். 

அரியானா மாநிலம், பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானி எனும் ஊரில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி. இந்திய குடியுரிமை பணிகளில் ஒன்றான ஐ.ஆர்.எஸ். எனும் இந்திய வருவாய்துறை பணியில் சேர்ந்து, டெல்லியில் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றினார். அந்த பணியின் போதே ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அவர் மேற்கொண்டதாக சொல்கின்றனர். 

அரசு பணியில் இருந்து கொண்டே போராடுவதில் உள்ள சிக்கலால், 2000ம் ஆண்டில் தனது பணியில் இருந்து தற்காலிகமாக விலகிய கெஜ்ரிவால், டெல்லியில் குடிமக்கள் இயக்கம் எனும் அமைப்பை துவக்கினார். நியாயமான, ஒளிவுமறைவற்ற அரசு அமைய வேண்டும் என போராடிய அவர், 2006ம் ஆண்டு தனது பணியில் இருந்து முழுமையாக விலகினார். அதன் பின்னர் தகவல் பெறும் உரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்ற இவர், அந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார். இது போன்ற நடவடிக்கைகளால் பிரபல தனியார் தொலைக்காட்சியான சி என் என் -ஐபிஎன் தொலைக்காட்சி இவருக்கு 2006ம் ஆண்டு சிறந்த இந்தியருக்கான பட்டத்தை வழங்கியது.

இந்த சூழலில்தான் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில், ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார் கெஜ்ரிவால். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து, 2012ம் ஆண்டு இறுதியில் ஆம் ஆத்மி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னர் இவரது நடவடிக்கைகள் எல்லாம் மக்களை திரும்பி பார்க்க வைத்தது. 2013ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்தது அதில் மிக முக்கியமான ஒன்று.

தேர்தலில் போட்டி என அறிவித்த போது அரசியல் கட்சிகள், ஆம் ஆத்மியை அலட்சியமாகத்தான் பார்த்தது. டெல்லி தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கும், பி.ஜே.பி.க்குமிடையேதான் போட்டி இருக்கும் என்ற கருத்து நிலவியது. இந்த சூழலில் வெளியான கருத்து கணிப்புகள் எப்படியும் 15 முதல் 20 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெல்லும் என சொல்ல அதிர்ந்து போனது காங்கிரசும், பி.ஜே.பி.யும். ஆனால் அதை விட அதிக இடத்தில், அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வென்றது ஆம் ஆத்மி. 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் கெஜ்ரிவால். பி.ஜே.பி. 31 தொகுதியில் வென்ற போதும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர காங்கிரஸ் முன்வர, அதையேற்று டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்.

பதவியேற்ற முதல் நாளிலேயே நிதி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய கெஜ்ரிவால், அதிரடி மின்கட்டண குறைப்பு, இலவச குடிநீர் திட்டம், வீடு இல்லாதவர்கள் பயன்படுத்த பழுதடைந்த பஸ்கள், ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை என இவரது நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையை கண்டித்து, கெஜ்ரிவால் போராட்டம் நடத்த அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை கோபப்படுத்தியது.

இந்த சூழலில் டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயன்றார் கெஜ்ரிவால். மொத்தமுள்ளா 60 பேரில், 47 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, போதிய ஆதரவு கிடைக்காமல், தீர்மானம் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜன்லோக்பால் மசோதாவை காரணம் காட்டியே, ஆட்சி அமைத்து 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். தொடர்ந்து, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், வாரணாசி தொகுதியில், பி.ஜே.பி.யின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால் அங்கு தோல்வியை தழுவினார்.

டெல்லியில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க மறுக்கவே, சட்டசபையை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆம் ஆத்மியின் சார்பில் இந்த தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். நாடாளுமன்ற தேர்தல், சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் வென்ற தன்னம்பிக்கையில், மோடி அலை, மோடி மேஜிக் என களமிறங்கிய பி.ஜே.பி, முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மியில் இருந்து விலகிய, முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியை அறிவித்தது.

தேர்தலில் ஆம் ஆத்மி - பி.ஜே.பி.யிடையே கடும் போட்டி நிலவும் என்பன போன்ற கருத்துகள்தான் கருத்து கணிப்பில் வெளியானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மோடி... மோடி... என வாய் வலிக்க வலிக்கப் பேசிய பி.ஜே.பி.யினருக்கு சரியான அடி கொடுத்துள்ளனர் டெல்லி மக்கள். காங்கிரஸ், பி.ஜே.பி.யின் முதல்வர் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் தோற்க, போட்டியிட்ட 70 இடங்களில், 67 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. கிரண்பேடி உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் தோல்வியை தழுவ, வெறும் 3 பேர் மட்டுமே பி.ஜே.பியின் தரப்பில் வெற்றி பெற்றுள்ளனர். மறுபுறம் காங்கிரசை முழுமையாக துடைத்தெறிந்து விட்டனர் டெல்லி மக்கள்.

95 சதவீத இடங்களில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால். நிச்சயம் இது வரலாறு காணாத தேர்தல் வெற்றிதான். 49 நாட்களில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தபோது, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு வாக்களித்த மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதா? என பெரும் கேள்வியும் எழுந்தது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி 95 சதவீத இடங்களை ஆம் ஆத்மிக்கு வழங்கி, கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்கியுள்ளனர் டெல்லி மக்கள். அதுவும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு அனுப்பியுள்ளது என்பது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இளம் முதல்வர் என அடையாளத்துடனும், பெருமையுடனும் இரண்டாவது முறை டெல்லியின் முதல்வராக பதவியேற்கும் கெஜ்ரிவால், தேர்தலுக்கு பின்னால் பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாமல் ராஜினாமா செய்தவர் என்ற இமேஜை உடைக்க 5 ஆண்டுகள் அவர் எந்த சிக்கலும் இல்லாமல் பதவியை தொடர வேண்டியது அவசியம். "மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தித் தந்தால், தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பேன், இடையில் ஓட மாட்டேன்' என சத்தியம் செய்யாத குறையாக அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதை, அப்படியே நடத்தி காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அடுத்து ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவது, மின் கட்டணத்தை குறைப்பது, இலவச தண்ணீர் போன்ற ஏற்கனவே கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயமும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டிய கட்டாயமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்ளது. மக்கள் கெஜ்ரிவாலிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது 95 சதவீத இடங்களில் வெற்றி பெற வைத்ததன் மூலம் மக்கள் உணர்த்தி விட்டார்கள். 

இனி மக்களின் ஆதரவை நிலை நிறுத்திக்கொள்ள அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய சவால் கெஜ்ரிவாலின் முன் இருக்கிறது.