பொது நிகழ்ச்சிக்கு அரைகுறை ஆடையுடன்தான் வருவேன்... ஆனா, அதை போட்டோ எடுக்கக் கூடாது என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். ஆடியோ ரீலிஸ் உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி... பள்ளிக்கூட விழாவாக இருந்தாலும் சரி... மினி ஸ்கர்ட் உள்ளிட்ட உடைகளை அணிந்து கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக வருவது சினிமா நடிகைகளின் வழக்கம். ஒருசில நடிகைகளைத் தவிர பெரும்பாலான நடிகைகள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற விழா ஒன்றில் நடிகை ஸ்ரேயா வழக்கம்போல குட்டைப்பாவாடை அணிந்து வந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியதென்றால், இன்னொருபுறம்... இருக்கையில் அமர்ந்த நிலையில் கருணாநிதி வழங்கிய நினைவுப் பரிசினை வாங்குவதற்கு ஸ்ரேயா பட்ட பாடு தனிக்கதை!
அதே ஸ்ரேயாதான் இன்று தனக்கென ஒரு தடாலடி சட்டத்தை இயற்றியிருக்கிறார். சமீபத்தில் மார்கண்டயன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான்கான், விஜய், நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை ஸ்ரேயா லூஸ் ஸ்கர்ட் உடை அணிந்து வந்திருந்தார். குட்டைப் பாவாடையை விட குட்டையாக இருந்த அந்த உடையில் ஸ்ரேயாவின் அழகு விழாவில் பங்கேற்றவர்களை கலங்கடித்தது. விடுவார்களா போட்டோகிராபர்கள்... ஸ்ரேயாவை சுற்றிச் சுற்றி போட்டோ எடுத்தனர்.
இதனால் வெட்கத்தால்(?) நெழிந்த ஸ்ரேயா, ஒரு போட்டோகிராபரை அழைத்து, அவர் எடுத்திருந்த படங்களைக் காண்பிக்குமாறு கேட்டார். வேறு வழியின்றி அவரும் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார். அதோடு, இனி டாப்ல மட்டும் எடுங்க, இடுப்புக்கு கீழே எல்லாம் எடுக்கக் கூடாது என கடுமையாகக் கூறினார். இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, எனக்கு கேமரா ப்ளாஷ் அலர்ஜி இருக்கிறது. அதனால்தான் கூப்பிட்டு சொன்னேன், என்று கூறி மழுப்பினார்.
பொது நிகழ்ச்சிகளுக்கு அரை நிர்வாணம் ரேஞ்சுக்கு ஆடையணிந்து வந்தது தப்பில்லை; அதை படம் எடுத்ததுதான் தப்பு என்று ஸ்ரேயா பேசுவது சரியா? தவறா? என்பது பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே...!
No comments:
Post a Comment