ஏணியில் ஏறும்போதே படியை பிடுங்குகிற வழக்கம் சினிமாவிலும் அரசியலும் சகஜம்தான். சீமான் விஷயத்திலும் அதுதான் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அண்மைகால நிகழ்வுகள். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருக்கிறார். இந்த செய்தி உண்மையா, பொய்யா என்பது இன்னும் சில தினங்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும். .ஆனால் விஜயலட்சுமியை து£ண்டி விட்டு சீமானின் புகழை சிதைக்கிற முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நேற்று மாலை நடந்த ஒரு சிறு சம்பவமே இதற்கு சாட்சி.
அண்மையில் அதிமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர்தான் இந்த தகவலை மீடியாக்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பினார். அதில் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருக்கிறார். உடனே நீங்கள் அங்கு போனால் சூடான செய்தி காத்திருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. பரபரப்பான மீடியா நண்பர்கள் இந்த தகவலை காட்டு தீ போல பரவ செய்தார்கள். அத்துடன் காவல் துறை ஆணையர் அலுவலகத்திலும் குவிந்துவிட்டார்கள்.
ஆனால் அங்கு விஜயலட்சுமி வரவேயில்லை. அவர் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இது வதந்திதான் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் அவர் வந்து புகார் கொடுத்ததாக பின்னர்தான் மீடியாக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
நமது சந்தேகமெல்லாம் இதுதான். விஜயலட்சுமி புகார் கொடுக்க வருகிற விஷயம் ஒரு காங்கிரஸ் பிரமுகருக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி? அப்படியென்றால் விஜயலட்சுமியை து£ண்டியது யார்?
அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மண்ணை கவ்வியதற்கு பெரும் காரணம் சீமான்தான். அவர் எக்காரணத்தை கொண்டும் வளரக் கூடாது என்று சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என்ற சந்தேகமும், அதற்கு விஜயலட்சுமியை உடந்தையாக்கி இருக்கிறார்கள் என்றும் ஆவேசப்படுகிறார்கள் நாம் தமிழர் கட்சியின் தளபதிகள்.
No comments:
Post a Comment