இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்பவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் முத்திரை பதித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது முறையாக கோப்பையை வெல்ல இவரது பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி நடைபெற்று கொண்டு இருக்கும் போது அஸ்வினுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அஸ்வினுக்கும், அவருடன் பள்ளியில் படித்த பிரீத்தி என்பவருக்கும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இரு வீட்டு பெற்றோரும் பேசி எடுத்த திருமண முடிவு இதுவாகும். இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அஸ்வினின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். மற்ற யாருக்கும் அழைப்பு அனுப்பப்பட வில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவருடன் விளையாடும் எந்த ஒரு வீரரையும் அவர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. தனது குடும்ப நிகழ்ச்சி தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் யாரையும் அழைக்க அஸ்வின் விரும்பியது இல்லை.
சென்னை அணியில் உள்ள சென்னையை சேர்ந்த தனது நெருங்கிய கிரிக்கெட் வீரர்களை கூட அவர் அழைக்கவில்லை. ஐ.பி.எல். போட்டியின் போது கவனம் சிதறி விடக் கூடாது என்று கருதி தனது நெருங்கிய கிரிக்கெட் வீரர்களை கூட அழைக்க வில்லை. அஸ்வின்-பிரீத்தி திருமணம் சென்னையில் நவம்பர் மாதம் நடைபெறலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment