சமூக வலைதளங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த திடீரென சீனா தடை விதித்துள்ளது.
ராணுவம் தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியாகாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களை பயன்படுத்தவும், இணையதளம் மூலம் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவும், திருமணப் பொருத்தம் பார்க்கவும் ராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன ராணுவத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனினும், பணியில் இல்லாத நேரத்தில் வெளியே இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களில் அரசியல் நிகழ்ச்சிகளை பார்க்கவும் கேட்கவும் சீன ராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீன ராணுவத்தில் சுமார் 20 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment