2011ம் ஆண்டு தமிழ் திரையுலகம் மட்டுமல்ல இந்திய திரையுலகமே முணுமுணுத்த பாடல் WHY THIS KOLAVERI DI. தனுஷ் எழுதி பாடிய இப்பாடல் தமிழ் திரையுலகம், இந்தி திரையுலகம் , கிரிக்கெட் பிரபலங்கள் என பல தரப்பினரும் பாராட்டிய பாடல்.
அப்பாடல் குறித்து சில தகவல் துளிகள் :
* ' 3 ' படத்தில் இடம் பெற்று இருக்கும் இப்பாடல் அதிகாரபூர்வமாக இல்லாமல் இணையத்தில் வெளியானது. இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக ஆரம்பித்தது.
* ' 3 ' படக்குழுவினர் பாடல் பிரபலமாவதை பார்த்து உடனே WHY THIS KOLAVERI பாடல் மட்டும் அடங்கிய சி.டியை வெளியிட்டார்கள். சோனி நிறுவனம் அப்பாடல் உருவான விதம் என்று தனுஷ் பாடுவதாக அமைந்த வீடியோ பதிவை இணையத்தில் வெளியிட்டது.
* வெளியிட்ட அன்று முதல் கொலவெறி கொண்டு தமிழ்நாடு, இந்தியா என்று அனைத்து தரப்பு இளைஞர்கள் மத்தியில் அப்பாடல் பிரபலமாக ஆரம்பித்தது.
* TWITTER இணையத்தின் TRENDINGல் WHY THIS KOLAVERI என்ற TAG சில நாட்கள் முதல் இடத்தில் நீடித்தது. TRENDINGல் வந்ததால் முன்பை விட அப்பாடல் பிரபலமாக ஆரம்பித்தது.
* அமிதாப்பச்சன் இப்பாடலைக் கேட்டு தனுஷை பாராட்டினார். அவரைத் தொடர்ந்து இந்தி திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இப்பாடலை எழுதி பாடியது யார் என்று இணையவாசிகள் தேடியதன் மூலம் தனுஷ் மேலும் பிரபலமடைந்தார்.
* YOUTUBE இணையத்தில் உள்ள வீடியோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதனை படைத்தது. இதுவரை அவ்வீடியோ பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது.
* இப்பாடலை பலரும் பாடி, அந்த வீடியோவை YOUTUBE-ல் பதிவெற்றினர். இப்படி பல வடிவங்களில் WHY THIS KOLAVERI பாடல் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
* FLASH MOB-லும் WHY THIS KOLAVERI பாடல் இடம் பிடித்தது. மும்பையில் நடைபெற்ற FLASH MOB-ல் தனுஷ் பங்கேற்றார். AUCKLAND, BANGALORE ஆகிய இடங்களில் நடந்த FLASH MOB-களிலும் WHY THIS KOLAVERI இடம் பெற்றது.
* WHY THIS KOLAVERI பாடலுக்கு இசையமைக்க வெறும் 5 நிமிடங்கள் தான் தேவைப்பட்டது என பேட்டியில் தெரிவித்தார் இசையமப்பாளர் அனிருத். முதல் பாலிலேயே சிக்ஸர் ! WHY THIS KOLAVERI பாடல் YOUTUBE இணையத்தில் GOLDEN AWARD வென்று இவருக்கு பெருமை சேர்த்தது.
* இந்தி சேனல்கள் நடத்திய இசை நிகழ்ச்சிகளில் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் பங்கேற்றார்கள்.
* டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தனுஷை அழைத்து தனது பாராட்டினை தெரிவித்தார்.
* இந்திய பிரதமர், சீன பிரதமருக்கு அளித்த விருந்தில் தனுஷ் கலந்து கொண்டதன் மூலம் இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிந்த நபராக தனுஷ் வலம் வருகிறார். INDIA'S MOST SEXIEST VEGETARIAN வாக்கெடுப்பில் தனுஷ் பெயரும் இடம்பெற்று இருக்கிறது.
* CNN நிறுவனம் TOP SONG OF THE YEAR என்று WHY THIS KOLAVERI பாடலை பாராட்டி இருக்கிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் 'ஆடுகளம்' படத்திற்காக தேசிய விருது வென்றவர், ஆண்டு இறுதியில் இப்பாடல் மூலம் பலரைச் சென்றடைந்துள்ளார். தனுஷ் 2012ல் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார்.
தனுசின் கொலைவெறி தமிழையும்,ஆங்கிலத்தையும் கொலை செய்தது.ஆனாலும் Jaffna edition நல்ல தமிழுடன் பாடலைத் தந்தது. சாருலதா மணியும்,சிறிமதுமிதாவும் இணைந்து பாடிய பெண்கள் பாடல் கொலை செய்தது இருந்தும் இறுதியில் ஒரு நல்ல செய்தியை சொன்னது. இத்தாலி பாடல் கூட சுமாராக இருந்தது.
ReplyDeleteஇந்த பாடல்ல அப்பிடி என்ன தான் இருக்கோ தெரியலை.
ReplyDelete