தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிதான். பொதுவாக எந்த சினிமா விழாவிலும் பார்க்க முடியாத மனிதரான நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
ஸ்டுடியோ அல்லது திரையரங்கில் விழா வைத்தால் அப்துல் கலாம் வருவது சந்தேகம் என்பதால், நேராக அவர் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லத்துக்கே போய், அவர் கையால் வெளியிட வைத்து வாழ்த்துப் பெற்றனர் படக்குழுவினர்.
யதார்த்தமான கதைக் களத்தில் உருவாகியுள்ள படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. வி தனபால் இயக்கியுள்ளார். என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வைரமுத்து, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர். மின்வெளி மீடியா தயாரித்துள்ளது.
படத்தின் பாடல்களை இயக்குநர் மகேந்திரன் வெளியிட, முதல் பிரதியை அப்துல் கலாம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் இயக்குநர் தனபால், வி பொன்ராஜ், இசையமைப்பாளர் ரகுநந்தன், எடிட்டர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சினிமா இசைத் தகட்டை அப்துல் கலாம் வெளியிடுவது இதுவே முதல்முறை!
No comments:
Post a Comment