விஜயகாந்த், சிம்ரன் ஜோடியாக நடித்து 2002-ல் வெளியான படம் “ரமணா” ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார். இப்படம் தமிழக மெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. கஜினி மூலம் முருகதாஸ் இந்தி யில் பிரபலமாகியுள்ளதால் அவர் இயக்கிய முந்தைய படங்களின் சி.டி.க்களை இந்தி நடிகர்கள் வாங்கி பார்த்து வருகின்றனர்.
அதில் ரமணா படம் ஷாருக்கானை கவர்ந்தது. அதை இந்தியில் ரீமேக் செய்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியிலும் ஏ.ஆர். முருகதாசே இயக்குகிறார். இதில் சிம்ரன் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பிரசவத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் நடிக்கும் முதல் படம் இதுவாகும். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. ரமணா படம் ஏற்கனவே தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. அங்கு சிம்ரன் வேடத்தில் ஜோதிகா நடித்தார்.
No comments:
Post a Comment