வில்லன் நடிகர் பொன்னம்பலம் திரையில் தோன்றினாலே டெரராக இருக்கும். குறிப்பாக காலை தலைக்கு மேலே தூக்கி அசாதாரணமாக ஃபைட் செய்யும் அவரது ஸ்டைலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. இடையில் இயக்குனர் அவதாரம் கூட எடுத்தார் பொன்னம்பலம். தற்போது அவ்வளவோ பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் அ.தி.மு.க.,வில் தலைமைக் கழக பேச்சாளராக இருக்கிறார்.
பொன்னம்பலத்திற்கு இப்போது ஒரு காரால் பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளதாம். டாடா சபாரி கார் ஒன்றை செகண்ட் ஹேண்டில் வாங்கியிருக்கிறார் பொன்னம்பலம். அந்தக்கார் பொன்னம்பலம் வாங்குவதற்கு முன்னர் இரண்டு, மூன்று பேரிடம் இருந்திருக்கிறது. முதன் முதலில் அதனை நடிகர் நெப்போலியன் தான் வாங்கியிருக்கிறார். இந்த விஷயம் பொன்னம்பலத்துக்கு தெரியாது. நெப்போலியனுக்குப் பின்னர் 3 பேர் கைமாறி பொன்னம்பலத்தின் கைகளுக்கு வந்த அந்த டாடா சபாரியில் முதல் நாள் அவர் அ.தி.மு.க., தலைமை கழகத்திற்குச் சென்று இறங்கிய போது .. ரத்தத்தின் ரத்தங்கள் என்ன அண்ணே நெப்போலியன் காரில் வந்திருக்கிறீர்கள் எனக் கேட்டு இருக்கின்றனர். தூக்கி வாரிப் போட்டிருக்கிறது பொன்னம்பலத்திற்கு. அதன் பின்னர் தான் அவருக்கு தெரிய வந்திருக்கிறது கார் நெப்போலியனிடம் இருந்திருக்கிறது என்பதும் அதனை காட்டிக் கொடுத்தது காரின் பேன்சி நம்பர் என்பதும்.
இதனால் தனது கழக பதவிக்கு பிரச்னை வருமோ என்ற டென்ஷனில் தற்போது தலைமைக்கழகப் பக்கம் சென்றால் ஆட்டோவில் தான் செல்கிறாராம் பொன்னம்பலம். யானை காதில் எறும்பு போனால் சிக்கல் என்பதன் அர்த்தம் புரிகிறதா!!
No comments:
Post a Comment