இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் திருமணத்திற்குப் பிறகு சற்று சுணக்கமாகவே உள்ளார்.
திருமணத்திற்கும் கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கூல் கேப்டன் என்று பெயர் எடுத்துள்ள டோணி கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி சாக்ஷியை மணந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடினார். தனது திறமையால் இந்திய அணியை வெற்றி பாதையில் அழைத்துச் சென்றார். இதையடுத்து 28 ஆண்டுகளாக வெறும் கனவாகவே இருந்த உலகக் கோப்பை இந்தியாவுக்கு கிடைத்தது. அதன் பின்னர் டோணியின் புகழ் விண்ணைத் தொட்டது.
முன்னதாக அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர ஷோவாக்குக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஷேவாக் புதுத் தெம்புடன் விளையாட வந்தார். அன்றில் இருந்து இன்று வரை அதிரடி ஆட்டம் தான்.
இதேபோன்று சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினுக்கும், அவரது நீண்டநாள் தோழி பிரீத்தி நாராயணனுக்கும் கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி திருமணம் நடந்தது. அதையடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஹாட்ரிக் சாதனை செய்தது மட்டுமின்றி சதமும் அடித்து அனைவரையும் அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியாவிலும் நன்றாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி நடாஷா ஜெயனினை மணந்த கவுதம் கம்பீருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் அவர் சொதப்பலோ, சொதப்பல். மற்றவர்கள் எல்லாம் திருமணம் முடிந்து வந்த வேகத்தில் வெளுத்து வாங்க, கம்பீர் உல்டாவாக சொதப்புகிறார். இதனால் அவருக்குப் பதிலாக அஸ்வினை துவக்க ஆட்டக்காரராக போட்டால் என்ன என்று ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.
நல்லா இருந்த கம்பீருக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. மந்திரித்து விட்ட மாதிரி இருக்கிறார்!.
No comments:
Post a Comment