இசை வெளியீடு எனப்படும் ஆடியோ சி.டி. வெளியீட்டு வைபவங்களில் கூட புதுமைகளை புகுத்துவதில் தமிழ்சினிமாவுக்கு நிகர் தமிழ் சினிமா மட்டும் தான்! அந்த வகையில் இன்று (09/01/12) சென்னை பிரசாத் லேப் பிரிவியூ திரையரங்கில் நடைபெற இருக்கும் மாடர்ன் சினிமா வழங்கும் எஸ்.ஜெகநாதனின் உடும்பன் திரைப்பட இசை விழாவில் ஒரு புதுமை படைக்க இருக்கிறார்கள்.
அதாகப்பட்டது, இப்படத்தில் இடம்பெறும் அத்தனை பாடல்களுமே மறைந்த மாமேதை கவிஞர்கள் பாவேந்தர் பாரதிதாசனும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரும் எழுதிய பாடல்கள்!
இப்படி ஒரு வித்தியாசத்தையும் புதுமையையும் இப்படத்தின் இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.பாலன் செய்திருக்கிறார். இப்படி கவி மேதைகளின் பாடல்கள் இடம் பிடித்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மேலும் வித்தியாசப்படுத்தி விறுவிறுப்பு கூட்ட., பாவேந்தர் பாரதிதாசன் புதல்வர் மன்னர்மன்னனையும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் புதல்வர் கே.குமாரவேலுவையும் உடும்பன் படத்தின் இசை வெளியீட்டிறகு வரவழைத்து., "இசை விழாவில் இசைக்கவிஞர்களுக்கு பாராட்டு" எனும் ஒரு பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்திருப்பதுடன் மேற்படி கவி புதல்வர்களின் முன்னிலையில் பாவேந்தர் பாரதிதாசனுக்கும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கும் தமிழ் சினிமாவில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக கொடிகட்டி பறந்துவரும் புலவர் புலமைபித்தன், கவிஞர்கள் பொன்னடியான், அப்துல்ரகுமான், நா.காமராசன், முத்துலிங்கம், பூவை.செங்குட்டுவன், மு.மேத்தா, அறிவுமதி, பிறைசூடன், பழனிபாரதி. நா.முத்துக்குமார், பா.விஜய், கபிலன், சனேகன், யுகபாரதி, விவேகா, தேன்மொழிதாஸ், ஏகாதசி, நெல்லை ஜெயந்தா, பிரியன், அண்ணாமலை, ஆண்டாள் பிரியதர்ஷினி உள்ளிட்ட கவிஞர்களால் பாராட்டு விழாவும் நடத்த இருக்கிறார்கள்.
இவ்விழாவில் தன் உடல் நிலையை காரணம் காட்டி பாடலாசிரியர் வாலி வரமுடியாது என ஒதுங்கிக் கொள்ள., வைரமுத்துவோ., இரண்டு கவிஞர்களை இத்தனை பேர் பாராட்டும் மேடையில் தனக்கென்ன மரியாதை கிடைக்கும்? என வரமறுத்ததுடன்., வளரும் கவியான தன் மகன் மதன் கார்க்கிக்கும் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என தடா போட்டு விட்டாராம்!
ஒரு படத்தில் மொத்த பாடலையும் தானே எழுதினாலே ஆச்சு! இல்லை என்றால் போச்சு!! எனும் கருத்துடைய ஈகோ பிடித்த டைமண்டு இத்தனை கவிஞர்கள் கலந்து கொள்ளும் விழாவில் எப்படி கலந்து கொள்வார்...? என கிண்டலடிக்கிறது கோடம்பாக்கம்!
புதுமை புகுத்துவதற்கு மகிழ்ச்சி. பாவேந்தர், பட்டுக்கோட்டையார் போன்றவர்களின் தமிழுக்கும்,தரத்திற்கும் இதுவரை யாரும் வரவில்லை.எதோ காரணம் காட்டி புறக்கணித்தது தமிழை புறக்கணித்ததற்கு சமம்.அதுவும் மறைந்த கவிகளை அவமதிப்பது இவர்களின் அழுக்கான உள்ளத்தை காட்டுகிறது.வைரமுத்து முன்னரே ஒரு முறை பழைய பாடல்கள் தரமற்றவை என்றும்,அந்தக் காலத்தவர்கள் மட்டுமே அவற்றை ரசிக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது ஈகோ மட்டுமல்ல,உண்மையான கவிஞர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.இது சுயனலம். கனிமொழியை வரவேற்க விமான நிலையம் சென்ற கருனானிதி,முல்லைப் பெரியாறு விடயத்தில் கொண்டு வரப்பட்ட சட்டசபை தீர்மானத்திற்கு செல்லவில்லை.இந்த சுயனலவாத அரசியல்வாதிகளையும்,சினிமாக்காரர்களையும் என்ன சொல்லி அழைப்பது?
ReplyDeletemoorthy@பச்சோந்திகள் என்று அழைக்கலாமா ...?
ReplyDelete