இந்திய சினிமாவின் பிரமாண்ட படம், இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம், தரத்தில் ஹாலிவுட்டுக்கு நிகரான படம் என்ற பெருமைகளைப் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படம் பொங்கல் ஸ்பெஷலாக சன் டிவியில் வெளியாகிறது.
இந்த 90 ஆண்டு இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படம் இத்தனை பிரமாண்டமாய் எடுக்கப்பட்டதில்லை. ஒரு தமிழ்ப் படம் இத்தனை அரங்குகளில் வெளியானதுமில்லை. சென்னையில் மட்டும் 42 திரையரங்குகளில் வெளியான ஒரே படம். தெலுங்கில் ரோபோ செய்த சாதனை மிகப் பெரியது!
கடந்த சில தினங்களாகவே, இந்தப் படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பரவலாகக் கேட்டு வந்தனர்.
மறுவெளியீடு என்றால் குறைவான தியேட்டர்களில்தான் வெளியிட முடியும். அதனால் சன் டிவி அதிரடியாக பொங்கல் சிறப்புத் திரைப்படமாக எந்திரனை வெளியிடுவதாக இன்று அறிவித்துவிட்டது.
வரும் தை முதல் நாளில் 15.01.2012- மாலை 6 மணிக்கு சன் டிவியில் ரஜினியின் எந்திரனை மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொங்கல் அன்று இந்தப் படத்தை டிவியில் போடுவதால், அன்றைய தினம் வெளியாகும் புதிய படங்களின் வசூலை நினைத்து இப்போதே விநியோகஸ்தர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment