ராவணன் படத்திற்கு மீண்டும் ஒரு இந்தி படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். இப்போது அந்த படத்தில் பாலிவுட் நடிகை தபுவும் இணைந்துள்ளார். கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விக்ரமை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம். அவர் இயக்கிய ராவணன் படத்தில் விக்ரம் நடித்தார். தமிழ் மற்றும் இந்தியில் உருவான இப்படம் சரியாக போகவில்லை என்றாலும், அந்த படத்தில் நடித்த விக்ரமிற்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு இந்தி படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த பிரபல மலையாள டைரக்டர் பிஜாய் நம்பியார் தான் இந்தபடத்தை இயக்குகிறார். படத்திற்கு டேவிட் என பெயரிட்டுள்ளனர். இதில் விக்ரம் கொள்ளைக்காரனாக நடிக்கிறார்.
இந்நிலையில், விக்ரமுடன் சேர்ந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தபுவும் நடிக்கவுள்ளார். இதுகுறித்து டைரக்டர் பிஜாய் நம்பியார் கூறுகையில், தபு நடிப்பது உண்மை தான். படத்தில் அவருடைய கேரக்டர் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ரோலுக்கு அவர்தான் பொறுத்தமானவர் என்பதால் அவரை தேர்வு செய்தேன். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்குகிறது. இந்தாண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் என்றார்.
No comments:
Post a Comment