தெலுங்கில் மகேஷ்பாபு, பூரி ஜெகநாத் இணைந்து செய்த படம் 'போக்கிரி'. தெலுங்கில் வசூல் மழையில் நனைந்ததால் இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி இங்கும் வரவேற்பை பெற்றது.
தற்போது மகேஷ்பாபு, பூரி ஜெகநாத் இணைந்து இருக்கும் படம் 'தி பிஸினஸ்மேன்'. இப்படம் தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. காஜல் அகர்வால் நாயகியாக நடித்து இருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார்.
கடைசியாக மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'தோக்குடு' படம் தமிழ்நாட்டில் வெளியாகி இதுவரை எந்த ஒரு தெலுங்கு படமும் செய்யாத வகையில் வசூல் சாதனை படைத்தது.
'தி பிஸினஸ்மேன்' படத்தின் மொத்த உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். படத்தின் வெளியீட்டு உரிமையை மட்டுமல்லாமல் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார்கள்.
'தி பிஸினஸ்மேன்' படம் வெற்றி பெற்றால் தமிழ் ரீமேக்கில் மகேஷ்பாபு வேடத்தில் சூர்யாவா அல்லது கார்த்தியா என்பது படத்தின் வெற்றியை பொருத்து இருக்கிறது.
No comments:
Post a Comment