அஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-ll படத்தின் ஷூட்டிங் கடைசி கட்டத்தில் இருக்கிறது. அஜித் அடுத்ததாக விஷ்ணுவர்தனின் படத்தில் நடிக்கிறார்.
விஷ்ணுவர்தனின் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்ட போது, “ கதை நல்லா தான் இருக்கு. எனக்கும் இந்த படத்தில் நடிக்கனும்னு விருப்பம் தான். ஆனால் நீங்கள் கேட்கும் தேதிக்கு கால்ஷீட் கொடுக்க முடியாது. “ என்று கூறியிருக்கிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். விஷ்ணுவர்தன் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.
அதன் பிறகு அஜித் நடித்த கிரீடம் படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் படத்தில் நடிக்கிறார். ஏ.எல்.விஜய் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் தாண்டவம் படம் முடிந்ததும் அஜித்துடனான படத்தை துவங்குவார் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment