திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை மீனா வழிபட்டார். தரிசனம் முடிந்து வெளியேவந்த அவரை முன்வாசல் வழியாக செல்ல பாதுகாவலர்கள் அவரை அனுமதிக்காததால் வேறு வழியாக சுற்றிக் கொண்டு சென்றார்.
நடிகை மீனா சாமி வழிபாட்டுக்காக குழந்தையுடன் வந்து காத்திருந்தார். அவருக்கு முன்னால் நடிகர் நாகர்ஜூனா, மனைவி அமலா, மகன் அகியோருடன் வந்து இருந்தார்.
நாகர்ஜூனா தரிசனத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டார். அப்போது மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல் அமைச்சர் கிரண்குமார் ரெட்டி கோவிலுக்கு வந்தனர். இதனால் மீனா தடுத்து நிறுத்தப்பட்டார்.
பிரணாப்முகர்ஜி சென்ற பிறகே அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார். பின்னர் தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை முன்வாசல் வழியாக செல்ல பாதுகாவலர் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் மீனா நான் குழந்தையுடன் வந்துள்ளேன். ராம் பகீஷா தங்கும் விடுதி முன் எனது கார் நிற்கிறது எனவே இந்த வழியாக செல்ல அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் மத்திய அமைச்சர் பாதுகாப்பு கருதி முன்வாசல் வழியாக செல்ல அனுமதிக்க பாதுகாவலர்கள் மறுத்து விட்டனர். இதனால் பின்புறம் லட்டு கவுண்டர் வழியாக வெளியே வந்த நடிகை மீனா வேறு வழியாகச் சென்று விடுதியை அடைந்தார்.
No comments:
Post a Comment