சேலத்தில் நள்ளிரவு 12மணி முதல் வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டது. நேற்று வரை வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1667.50 (19கிலோ எடை) ஆக இருந்தது. இதன் விலை நேற்று நள்ளிரவு முதல் ரூ.1890 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வர்த்தக சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.223 அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் ஓட்டல் உரிமையாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வர்த்தக சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது போல் கார்களுக்கு போடப்படும் கியாஸ் கிலோவிற்கு ரூ.6 அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. திடீரென ஏன் இந்த விலை உயர்வு என சேலத்தை சேர்ந்த கியாஸ் கம்பெனி ஏஜென்சி உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல்தான் விலை உயரும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தற்போது வர்த்தக சிலிண்டர் மற்றும் காருக்கு நிரப்பப்படும் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.223 அதிகரித்துள்ளது எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment