ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படமான கோச்சடையானின் ஷூட்டிங் பைன்வுட் ஸ்டூடியோசில் நடந்து கொண்டிருக்கிறது. பல மூத்த இயக்குனர்கள் ரஜினியை வைத்து படம் இயக்கத் தயாராக இருக்கும் போது தனது மகள் இயக்கத்தில் ரஜினி சம்மதித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.
லண்டன் படப்பிடிப்பில் உள்ள ரஜினி தனது மகளை பற்றி அளித்துள்ள பேட்டியில் “நான் இதுவரை நடித்த சாதாரணமான ஷூட்டிங் போல் இது இல்லை. மேக்கப் போடாமல், எந்தவித அலஙார உடைகளும் இல்லாமல், ஷூட்டிங் ஸ்பாட் பார்க்காமல் நடிப்பை மட்டுமே குறியாய் கொண்டு படம் எடுக்கிறார்கள்.
முகபாவனைகளும், நெளிவு சுளிவுகளும் தான் கவனிக்கப்படுகின்றன. இதையும் சாதாரணமாக செய்துவிட முடியாது. மனதில் இருக்கும் காட்சிக்கு ஏற்றாற்போல் நடிக்க வைக்க வேண்டும். அனைவரது நடிப்பையும் ஒன்று செர்த்து காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
மனதிலேயே அனைத்தையும் கற்பனை செய்து வைத்திருப்பது கடினமானது. இது அவ்வளவு சுலபமான விஷயமே அல்ல ” என்று கூறியுள்ளார். ரஜினி, சரத்குமார், நாசர், ருக்மிணி என அனைவரும் படப்பிடிப்பில் உள்ளனர். ஆனால் படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனே தான் மிஸ்ஸிங்.
ரஜினி பிரம்மிப்புடன் பேசுவதை பார்த்தால் படம் பெரிய அளவில் வருமோ? என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் தனது மற்றொரு மகளின் படத்தை பார்த்துவிட்டு இதே போல் ரஜினி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையில்லாமல் போனதால் நம்ப மறுக்குதே மனம்.
No comments:
Post a Comment