Wednesday, February 4, 2015

கமலுடன் போட்டிபோடும் உதயநிதி...

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் ஏதோ இருக்காமே என்று கிசுகிசுவை பரப்பிவிட்ட நண்பேண்டா திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஜினி, அஜீத், விஜய் நடித்த படங்களே குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆக தடுமாறும் நிலையில், தனது பட அறிவிப்பை வெளியிட்ட கையோடு தியேட்டர்களை புக் செய்ய ஆரம்பித்து விட்டாராம் படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின். 

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'நண்பேண்டா'.

உதயநிதி - நயன்தாரா 

இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கொஞ்சம் கிளாமர், கூடுதல் ரொமான்ஸ் என கலக்கியுள்ளது இந்த ஜோடி என்று படங்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

உதயநிதியின் காமெடி ஜோடியாக சந்தானம் நடிக்க அவர்களுடன், கருணாகரன், சூஸன், மனோபாலா, ஷெரீன், பட்டிமன்றம் ராஜா, லொள்ளுசபா மனோகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் ' நண்பேன்டா ' படத்தை இயக்கியுள்ளார். இவர் எம்.ராஜேஷிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் 'நண்பேண்டா' படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே உதயநிதியும் சந்தானமும் இணைந்து வேணா மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு என்று பாடி கலக்கினார்கள். இப்போது அதே பாணியில் ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு ஆடியுள்ளனர். 

டப்பாங் குத்து மெட்டுல மெட்டுல 

தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல 

ஒத்துக்கிறேன் நானே உனக்கு வெத்தல 

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல 

தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல 

ஏரோ ஒன்னு விட்டியே விட்டியே நெஞ்சுல

சான்ஸே இல்லை 

அதைவிட ஒரு டூயட் பாடல் ஒன்றின் வரிகள் உதயநிதி, நயன்தாராவிற்காகவே ரியலாக எழுதப்பட்டது போல இருக்கிறது. 

நீ சன்னோ ந்யூ மூனோ

 நள்ளிரவுக்கு மேல் தான் நீ 
பெண்ணோ 

நீ பியானோ நான் ஃடியூனோ 

நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

ஓவர் ரொமான்ஸ் 

ஒகே ஒகே, இது கதிர்வேலன் காதல் படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் அடக்கியே வாசித்த உதயநிதி, நண்பேண்டா படத்தில் நயன்தாரா உடன் கூடுதல் நெருக்கம் காட்டித்தான் நடித்துள்ளார். 

உன்னோடு நயன்தாரா 

எனதோன் "ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா 

உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா 

அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா 

கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா"

 என்று நயன்தாராவை வியந்து பாடும் உதயநிதி கொஞ்சம் ஓவர் ரிஸ்க்தான் எடுத்திருக்கிறார். இதற்குமேலும் கிசுகிசு வந்தால் அதை எப்படி சமாளிக்கப்போகிறாரோ?

ஏப்ரல் 2ல்

 பாடல்கள் மூலம் பரபரப்பு தீயை பற்றவைத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ' நண்பேண்டா' படத்தை உலகம் முழுவதும் ஏப்ரல் 2-ஆம் தேதியன்று ரிலீஸ் செய்வதாக உதயநிதி தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கமலுடன் போட்டி..

 ஏற்கனவே ஏப்ரல் 2ஆம் தேதி உத்தமவில்லன், கார்த்தியின் கொம்பன் ஆகிய படங்கள் ரிலீஸாகலாம் என்ற நிலையில் உதயநிதியும் அதே தேதியில் தனது படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்.

தமன்னா இருக்காக

 உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், கருணாகரன், ஷெரின், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாராம்.

ஏப்ரல் 2-ல் படம் ரிலீஸ் என்றாலும், இப்போதே தியேட்டர்களை புக் செய்யும் வேலையில் உதயநிதி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment