டெல்லியில், மின்னணு எந்திரங்களில் பெரிய அளவில் தில்லுமுல்லு நடந்து வருகிறது என்றும் எந்த பட்டனை அழுத்தினாலும் வாக்குகள் பாஜகவுக்கு பதிவாகிறது என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாற்றியுள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு வரும் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் சூடுபிடித்தள்ளது.
டெல்லியில், ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் மின்னணு எந்திரங்களை அந்தந்த பகுதிக்கு எடுத்துச் செல்லும் பணி தொடங்கியுள்ளது.
6 ஆம் தேதி இரவே இந்த வாக்குப் பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் வைக்கப்படும். இதற்கிடையே மின்னணு எந்திரங்களில் சிலவற்றை எடுத்து மக்களே ஆய்வு செய்யும் நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
டெல்லி கண்டோன்மென்ட் பகுதியிலும் அப்படி ஒரு ஆய்வு நேற்று நடந்தது. அப்போது ஒரு மின்னணு எந்திரத்தில் உள்ள எந்த பட்டனை அழுத்தினாலும், பாஜக வுக்கு வாக்கு பதிவானதாகக் கூறப்படுகிறத.
அடுத்தடுத்து நான்கு மின்னணு எந்திரங்களை எடுத்து ஆய்வு செய்தபோதும், எந்த பட்டன் மீது கை வைத்தாலும் பாஜக வுக்கு வாக்கு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையல்., இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மின்னணு எந்திரங்களில் பெரிய அளவில் தில்லுமுல்லு நடந்து வருகிறது. எந்த பட்டனை அழுத்தினாலும் வாக்குகள் பாஜக வுக்கு பதிவாகிறது“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தேர்தல அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment