மும்பை-புவனேஸ்வர் நடுவே பறக்கும் விமானத்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த தொழிலதிபரை வீடியோ எடுத்த பயணி ஒருவர் அதை யூடியூப்பில் வெளியிட்டார்.
அந்த வீடியோ இப்போது வைரலாக பரவியுள்ளது. கடந்த ஜனவரி 27ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மும்பையில் இருந்து புவனேஷ்வருக்கு இன்டிகோ விமானத்தில் சென்றார்.
அப்போது பின் இருக்கையில் 60 வயதான தொழிலதிபர் ஒருவரும் பயணித்துள்ளார். இவர் ஒரு முன்னணி நிறுவனத்தின் தலைவராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பயணத்தின்போது அந்த தொழில்அதிபர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் போலீசில், புகார் தெரிவித்தார்.
இருக்கைகளின் இடைவெளி வழியே என்னை தொடுவதற்கு முயற்சிகள் செய்தார். சிலநேரங்களில் அவருடைய செய்கைகள் அத்துமீறியதால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விமானநிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் வைத்து அந்த நபரை திட்டியதை அந்த பெண் மீண்டும் ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குற்றம் செய்த தொழில் அதிபர் வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டே பேசுகிறார்.
அவர் கூறுகையில்
நான் தவறுதலாக அந்த பெண்ணை தொட்டுவிட்டேன். அது மிகப் பெரிய தவறு தான். அனைவரும் தவறு செய்யத் தான் செய்கிறார்கள். அதனால் என்னை மன்னித்துவிடுங்கள். நானும் ஒரு பெண்ணுக்கு தந்தை தான் என்று தெரிவித்துள்ளார். அந்த பெண் எடுத்த அந்த 2 வீடியோக்களும் இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி போலீசார் தொழில்அதிபரை கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டம், பிரிவு 354-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் தொழில்அதிபருக்கு நோட்டீஸ் வழங்கிய பின்னர் அவரை வீட்டிற்கு செல்ல அனுமதி அளித்துள்ளனர்.

No comments:
Post a Comment