விராட் கோலி தற்போதைய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று மேற்கிந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து விவியன் ரிச்சர்ட்ஸ் கூறுகையில், ”ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சச்சின், லாரா, பொண்டிங், ஷேவாக் உள்ளிட்ட பட்டியலில் வீராட் கோலிக்கும் இடம் உண்டு. இளம் வயதிலேயே விராட் கோலி ஜாம்பவானுக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
26 வயதிலேயே 150 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்து 232 ரன்கள் எட்டுவது சாதாரண விஷயம் அல்ல. அதற்குள் 21 சதங்களை அடித்துள்ளதும் சாதாரணமானது கிடையாது. இளம் வீரராக இருப்பதால் இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாடுவார். தனது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இவரின் சாதனை பட்டியல்கள் நீளும்” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
முன்னதாக விவியன் ரிச்சர்ட்ஸ், ’விராட் கோலி விளையாடுவதை பார்க்கும் பொழுது, தன்னுடைய சொந்த இதயத்தை பிரதிபலிப்பதுபோல் இருக்கிறது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
26 வயதான விராட் கோலி இதுவரை, 33 டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்கள், 10 அரை சதங்கள் உட்பட 2547 ஓட்டங்களையும், 150 ஒருநாள் போட்டிகளில் அரைச்சதங்கள் உட்பட 6232 ஓட்டங்களையும், 28 ‘டி–20’ போட்டிகளில் 9 அரைச்சதங்கள் உட்பட 972 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment