தனது சமூகவலைதளப் பக்கக் கருத்துக்களால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு.
இம்முறை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழ் நடிகை ஒருவரைப் பற்றி கூறியுள்ள கருத்தால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைபை, இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என்ற அவரது ஆலோசனை ஊடகங்களில் பற்றி எரிந்தது.
மேலும், அனைத்து பதவிகளுக்கும், சினிமா நடிகைகள் போன்ற அழகான பெண்களை தேர்வு செய்வதைத்தான், நான் ஆதரிப்பேன். ஏனென்றால் இந்த அரசியல்வாதிகள் நிலாவையே கொண்டு வருவேன் என வாக்குறுதி கொடுப்பார்கள்.
ஆனால், மக்களின் நலனுக்காக எதுவுமே செய்யமாட்டார்கள் என கட்ஜூ தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் வேட்பாளராக கிரண்பேடிக்கு பதில் அழகான ஷாஜியா இல்மியை பாஜக களமிறக்கியிருக்கலாம் என கருத்து தெரிவித்தார் கட்ஜூ.
மேலும், பல நாடுகளில் அழகான முகங்களுக்குதான் மக்கள் வாக்களிக்கின்றனர். என்னை போன்ற வாக்களிக்காத நபர்கள் கூட ஷாஜியா இல்மிக்கு வாக்களிப்பார்கள் என விளக்கம் வேறு கொடுத்து கட்ஜூ, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினார்.
தேர்தல் களத்தில் திறமையை பார்க்காமல், அழகை பார்த்து வாக்களிக்க வேண்டும் என, அதுவும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர் கூறலாமா என்பது ஒருபுறம் விவாதம் கிளம்பியது. சர்ச்சையை தொடர்ந்து கட்ஜூ தனது கருத்துக்கு அளித்த விளக்கத்தில், ‘உங்கள் அனைவரது பிரச்சினை என்னவென்று தெரியவில்லை.
என்னைப் போன்ற வயதானவர்கள் அழகை ரசிக்கக் கூடாதா என்ன? ஒரு அழாகான பூவை நாம் ரசிப்பதாக கூறும்போது, அதனை நாம் பறிக்க நினைக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. தோட்டத்தில் இருக்கும் பூவை தூரத்தில் இருந்து ரசிப்பதில் தவறில்லை.
தோட்டத்துக்குள் அத்துமீறினால் தான் தவறு. அது போலதான், நான் அந்த பெண்ணின் அழகை ரசிப்பதாக கூறுகிறேன். அவரை குறித்து தவறாக பேசவில்லை. உரிமை எடுத்துக்கொண்டும் நடக்கவில்லை" என்றார்.
இந்த பரபரப்புகள் அடங்கும் முன்னதாகவே மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மெட்ராஸ் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த போது முன்னணி நடிகை ஒருவர் தன்னை வீட்டில் வந்து சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவின் தமிழாக்கம்: நான் அப்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தேன். ஒரு நாள் மாலை ஒரு அழகான சினிமா நடிகை என்னைப் பார்க்க வந்திருந்தார். நல்ல மேக்கப்புடன் வந்திருந்தார்.
எனது இல்லத்திற்கு வந்து என்னை சந்திக்க வந்தார். எனது தனிப்பட்ட செயலாளர் மூலமாக அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு வந்திருந்தார் (நான் எந்த சூசகத் தவலையும் சொல்ல மாட்டேன், சொன்னால் அந்த நடிகை யார் என்பது தெரிந்து விடும்). என்னிடம் அரை மணி நேரம் அவர் பேசினார்.
பின்னர் கிளம்பிச் சென்றார். மீண்டும் வந்து சந்திக்க விரும்புவதாக வேறு கூறிச் சென்றார். அவர் போன பிறகு, ஏன் என்னை வந்து இவர் சந்தித்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். நான் ஒன்றும் அவ்வளவு அழகான ஆண் அல்ல (சில பெண்கள் வேறு மாதிரியாக நினைக்கிறார்கள், அது வேறு கதை).
இருப்பினும் அந்த நடிகை மீது தமிழக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நான் கேள்விப்பட்டேன். அதில் உதவுவதற்காக அவர் என்னை வந்து சந்தித்திருக்கலாம் என நினைக்கிறேன்.
பிறகு எனது செயலாளரைக் கூப்பிட்டு மறுபடியும் அந்த நடிகை கூப்பிட்டால், எதையாவது சொல்லி பார்க்க முடியாது என்று கூறி விடுங்கள் என கூறி விட்டேன். அழகான நடிகைகளுடன் களியாட்டத்தில் ஈடுபட்டார் தலைமை நீதிபதி என்ற பெயரை எடுக்க நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் கட்ஜு. அவர் கூறிய நடிகை யார், அவர் மீது என்ன வழக்கு இருந்தது என்ற விவரம் தெரியவில்லை. கட்ஜுவின் இந்தப் பதிவால் பரபரப்பு கூடியுள்ளது.

No comments:
Post a Comment