Monday, February 2, 2015

தனுஷால் டெல்லியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் தனுஷை காண இன்று கூடிய கூட்டத்தால் டெல்லி ரசிகர்களையும், போக்குவரத்து இடையூறையும் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறிப் போயினர்.

அமிதாப் பச்சன் - தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஷமிதாப்’ படத்தின் அறிமுக விழா புதுடெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் பங்கேற்றதால் தங்களது உள்ளங்கவர்ந்த திரை நட்சத்திரங்களை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்பகுதியில் திரண்டனர்.

அறிமுக விழா முடிந்து அரங்கில் இருந்து வெளியேவந்த அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் ஆகியோரை அருகில் சென்று காணவும், அவர்களுடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு முந்தியடித்து சென்றதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து அவர்களை பத்திரமாக மீட்டு வழியனுப்பி வைக்கவும், இந்த ரசிகர்கள் பட்டாளத்தில் சிக்கி கன்னாட் பிளேஸ் வழியாக முன்னேறி செல்ல முடியாமல் சிக்கி தவித்த வாகன போக்குவரத்தை சரிப்படுத்தவும் டெல்லி போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.



No comments:

Post a Comment