Tuesday, February 3, 2015

என்னையும் பிரியாமணியையும் பார்த்து பயப்படுறாங்க - விமலா ராமன்

பொய், ராமன் தேடிய சீதை படங்களில் நடித்தவர் விமலா ராமன். அவர் கூறியதாவது:பெங்களூரில்தான் பிறந்தேன். தமிழில் 2 படங்களில் நடித்தேன். தெலுங்கு, மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளேன். 

விஷ்ணுவர்தன் நடித்த ஆப்தரக்ஷா படத்தில் கன்னடத்தில் நடித்தேன். அதன்பிறகு வந்த வாய்ப்புகள் பிடிக்காததால் ஏற்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ராஜ ராஜேந்திரா என்ற கன்னட படத்தில் நடித்தேன். என்னைப் பொறுத்தவரை மொழி பாகுபாடு பார்ப்பதில்லை. 

எனக்கு திரையுலகில் நெருங்கிய தோழி பிரியாமணி. இருவரும் ஒன்று சேர்ந்தால் எங்கே நம்மை கலாய்த்துவிடுவார்களோ என்று சகநட்சத்திரங்கள் பயப்படுவார்கள். ஒரே ஷூட்டிங்கில் இருவரும் இருந்தால்போதும் ரவுடித்தனம் செய்ய ஆரம்பித்துவிடுவோம். 

இப்படியொரு தோழி அமைவது அபூர்வம்தான். யாரை காதலிக்கிறீர்கள் என்கிறார்கள். யாரையும் காதலிக்கவில்லை. சமீபத்தில் அப்படியொரு சம்பவம் நிகழும் சூழல்கூட ஏற்படவில்லை. நடிப்பில்தான் கவனமாக இருக்கிறேன். தனியாக சந்தோஷமாக இருக்கிறேன்.


No comments:

Post a Comment