மகாத்மாவை சுட்டுக்கொன்ற கோட்சே பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன்படுத்துவது வேதனைக்குரிய விஷயம் என்று காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.
காந்தியை சுட்டுக்கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்றும், அவருக்கு கோவில் கட்டப்படும் என்றும் சில தலைவர்கள் கூறி வருகின்றனர். இது காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்திக்கு (வயது 55) மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
மகாத்மாவை சுட்டுக்கொன்றவர் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன்படுத்துவது வேதனைக்குரிய விஷயம். மகாத்மா அகிம்சை கருத்துகளை கொண்டிருந்தார். ஆனால் மற்றவர்கள் வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங்களை வளர்த்தனர். கோட்சேயை போற்றுவது, நாட்டின் வன்முறைக்கு வித்திடும் செயலாகும். இவ்வாறு துஷார் காந்தி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment