கோடம்பாக்கம் மைதானத்தில் இப்போது சரிசமமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நிச்சய வெற்றி’ குதிரைகள் ஹன்சிகாவும், நயன்தாராவும்தான்.
இரண்டு பேரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் கதாநாயகிகளும் இவர்கள் இருவரும்தான்.
2015–ல், இந்த 2 குதிரைகளில் எந்த குதிரை முந்தும், எந்த குதிரை பிந்தும்? என்பதுதான் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பு.
இதுபற்றி ஹன்சிகாவிடம் ஒரு பேட்டி. தயக்கமே இல்லாமல் சரளமாக பேசினார் ஹன்சிகா.
‘‘2015–ல் உங்களுக்கும், நயன்தாராவுக்கும் இடையேதான் உண்மையான போட்டி என்கிறார்கள். சம்பளத்திலும், ‘மார்க்கெட்’ அந்தஸ்திலும் நயன்தாராவை நீங்கள் முந்துவீர்களா?’’
‘‘நயன்தாரா, என்னை விட சீனியர். அவருடைய படங்களை பார்த்து இருக்கிறேன். எனக்கு அவருடைய நடிப்பு பிடிக்கும். ‘சீனியர்’ நடிகை என்ற வகையில், அவரை நான் மதிக்கிறேன். நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்று எனக்கே தெரியாது. அதையெல்லாம் அம்மாதான் பார்த்துக்கொள்கிறார்.
2015–ல் நான், நயன்தாராவை முந்துவேனா, மாட்டேனா? என்பது என் கவலை இல்லை. ஏறக்குறைய 24 மணி நேரமும் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்குள் போட்டி மனப்பான்மை இல்லை. எனக்கு நானே போட்டி. நான் நடிக்கும் படங்களைத்தான் போட்டியாக கருதுகிறேன். ஒரு படத்தை விட, இன்னொரு படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருக்கிறது.’’
‘‘ஹன்சிகா எனக்கு பிடித்த கதாநாயகி ஆகிவிட்டார் என்று விஷால் கூறியிருக்கிறாரே?’’
‘‘அதைக்கேள்விப்பட்டு நான் சந்தோஷப்பட்டேன். விஜய், தனுஷ், ஜெயம்ரவி வரிசையில், விஷாலும் எனக்கு பிடித்த கதாநாயகன் ஆகிவிட்டார்.’’
‘‘தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த உணவு எது?’’
‘‘என்னை, ஸ்கூலில் இட்லி என்றுதான் கூப்பிடுவார்கள். கொஞ்சம் சதைப்பற்றுடன் இருந்ததால், அப்படி அழைத்தார்கள். எனக்கு பிடித்த உணவும் இட்லிதான்.’’
‘‘தமிழ் இளைஞர்கள் பற்றி உங்கள் கருத்து?’’
‘‘தமிழ் இளைஞர்கள், ‘அட்வான்ஸ்’ ஆக இருக்கிறார்கள். நிறைய விஷயங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் ஆற்றல், தமிழ் இளைஞர்களிடம் இருக்கிறது. அதற்காக பெருமைப்படுகிறேன்.’’
‘‘மும்பையிலேயே முதியோர் இல்லத்தையும், ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்துகிறீர்களே...சென்னையில் அப்படி ஒரு இல்லம் நடத்தக் கூடாதா?’’
‘‘மும்பையில் என் அம்மாவும், அண்ணாவும் இருக்கிறார்கள். அவர்கள்தான் அந்த இல்லங்களை கவனித்துக் கொள்கிறார்கள். நமக்கு வேண்டியவர்களின் நேரடி கவனிப்பில் இருந்தால்தான் அந்த இல்லங்கள் நன்றாக செயல்படும். அதுமாதிரி ஒரு இல்லத்தை சென்னையிலும் நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கடவுள் என்ன நினைக்கிறாரோ, அது நடக்கும்.’’
‘‘மீண்டும் ஒரு படத்தில் பேய் வேடத்தில் நடிப்பீர்களா?’’
‘‘அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால், நடிப்பேன்.’’
‘‘சுந்தர் சி. தொடர்ந்து உங்களுக்கு வெற்றி படமாக கொடுத்துக் கொண்டிருக்கிறாரே...அவருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’
‘‘அதற்காக அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். சுந்தர் சி.யும், குஷ்பு மேடமும் எங்க குடும்ப உறுப்பினர்கள் போல் ஆகிவிட்டார்கள். எனக்கு பிடித்த ‘ஆம்பள’ சுந்தர் சி.
‘ஆம்பள’ படப்பிடிப்பில் எனக்கு தேனீ கொட்டியபோதும் சரி, ஒரு சீனுக்காக நான் சாப்பிடாமல் பட்டினி கிடந்தபோதும் சரி, என் அம்மாவைப்போல் கவனித்துக்கொண்டார்கள். சுந்தர் சி. படப்பிடிப்பு என்றால், என்னைப்பற்றி அம்மா கவலைப்பட மாட்டார். டைரக்டரும், மேடமும் சேர்ந்து என் பொண்ணை பார்த்துக் கொள்வார்கள் என்று கூறிவிடுவார்.’’

No comments:
Post a Comment