டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளின் மக்களின் முடிவு என்று எடுத்து கொள்ள முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டபேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் வெளிவரும் நிலையில், டெல்லியில் மிகப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று கிரண்பேடி டெல்லி முதல் மந்திரியாவார் என்று அமித்ஷா தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியதாவது:-
”முதல் மந்திரிக்கான தேர்தல் நடைபெறுகிறது என்பது தான் உண்மை. ஒரு மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் மத்திய அரசின் செயல்பட்டுக்கான மக்களின் அளிக்கும் முடிவாக இதை கருதக்கூடாது. மத்திய அரசின் செயல்பாடுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையாக இருந்தாலும், ஒரு மாநில தேர்தல் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கான மக்களின் கருத்தாக இருக்காது என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை நிராகரித்த அமித் ஷா, தங்கள் கட்சி மூலமே கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு கதாநாயகன் ஆக அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
அவரது பேட்டி டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அமையும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

No comments:
Post a Comment