விழுப்புரம் நகரில் நள்ளிரவில் சாலையோரம் குவியல் குவியலாக மனித எலும்பு கூடுகள் விற்பனை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மனித உடல்கள் தோண்டி எடுத்து, எலும்பு கூடுகள், மண்டை ஓடுகளை ஒரு நபர் ரூ. 5000 க்கு விற்பனை செய்ததால் இந்த பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் கே.கே., ரோடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. பெயிண்டர்.
இவர் நேற்றிரவு 11:15 மணிக்கு குடி போதையில் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தின் மண்டை ஓடுகள், கால் மற்றும் கை எலும்புகளை தோண்டியெடுத்து, கே.கே., ரோடு சாலை நடுவில் வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு, ஓரமாக அமர்ந்திருந்தார்.
இதனால் அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் போனது.
அவர்கள் உடனடியாக விரைந்து வந்து விசாரித்ததில், சுடுகாட்டில் எலும்புகளை திருடி வந்து கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆய்வுக்காகவும், மந்திரம், கொரளி பூஜைகளுக்கு மந்திரவாதிகள் வந்து வாங்கி செல்வதாகவும் அதற்காக விற்பதாகவும், நடவடிக்கை இல்லாததால் தான் இது போன்று செய்ததாக தெரிவித்தார்.
எலும்புக் கூடுகளையும், மண்டை ஓடுகளையும் 5000 ரூபாய் வரை விலை வைத்து இந்த நபர் விற்று வந்துள்ளாராம். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கண்டித்து எலும்புகளைக் கைப்பற்றி அப்புறப்படுத்தினர்.
விழுப்புரம் நகரில் நள்ளிரவில் சாலையோரம் குவியல் குவியலாக மனித எலும்பு கூடுகள் விற்பனை அங்கு பரபரப்பை ஏற்ப்படுத்தி விட்டது.

No comments:
Post a Comment