அனுஷ்கா நடிக்க தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் படம் பாஹுபலி (மகாபலி). ராஜமவுலி இயக்குகிறார். பெரும்பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜமவுலி ஆந்திர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். தீவிர விசாரணைக்கு பிறகு இப்படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் காட்சிகளை லீக் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இது தொடர்பாக வர்மா என்ற தொழில்நுட்ப கலைஞரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.பழிவாங்குவதற்காகவே பட காட்சிகளை லீக் செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.இது பற்றி போலீசிடம் அவர் கூறும்போது,
‘பாஹுபலி படத்துக்கான தொழில்நுட்ப பணியில் நான் இருந்தேன். ஆனால் பட நிறுவனம் என்னை நாகரீகமாகநடத்தவில்லை. அதற்கு பழிவாங்கவே காட்சிகளை லீக் செய்தேன். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணி இருந்தேன். ஆனால் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்' என்றார். இது குறித்து ராஜமவுலி உள்ளிட்ட பட குழுவினர் யாரும் பதில் அளிக்கவில்லை.

No comments:
Post a Comment