பிரதமர் நரேந்திர மோடியும் அவரது மனைவி யசோதாபென்னும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யசோதபென் மனுதாக்கல் செய்து இருந்தார்.
இதுபற்றிய செய்தியை கிர்னாரில் உள்ள தூர்தர்ஷனின் குஜராத்தி மொழி சேனல் கடந்த ஜனவரி 1–ந் தேதி ஒளிபரப்பியது. இதைத்தொடர்ந்து, ஆமதாபாத்தில் உள்ள தூர்தர்ஷன் உதவி இயக்குனர் வி.எம்.வனோல் அங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் பணியில் இருந்து ஓய்வு பெற சுமார் 2 ஆண்டுகளே உள்ளன.
இதற்கிடையே, வனோலின் இடமாற்றத்துக்கும் குறிப்பிட்ட சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும், செய்திப்பிரிவு மற்றும் நிர்வாக முடிவின் அடிப்படையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்ச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment