கொசோவோ நாட்டில் ஜெர்மனின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரை போலவே நபர் ஒருவர் வசிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியில் தனது சர்வாதிகார ஆதிக்கத்தை நிலைநாட்டி, உலகையே ஸ்தம்பிக்க வைத்த ஒரு மாபெரும் கொடூர தலைவர் ஹிட்லர்.
இவரை போலவே கொசோவோ நாட்டில் மிட்ரோவிகா நகரில் இமின் ட்ஜினொவ்சி என்ற நபர் வசித்து வருகிறார். அந்நாட்டு மக்கள் எல்லோரும் இவரை ‘கொசோவோ ஹிட்லர்’ என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இவர் தலைமுடி, மீசை, நடை, உடை, பாவனை எல்லாமே ஹிட்லரைப் போலவே செய்து கொண்டு வலம் வருகிறார்.
கடந்த 1998–ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கோசோவோவுக்கு சென்ற இவர், செர்பியாவுடன் நடந்த யுத்தத்தில் பங்கேற்றார். அப்போது போரினால் ஏற்பட்ட பலத்த காயத்தால் அறுவை சிகிச்சை பெற்ற இவர், அதற்கு பின் ஜெர்மனி திரும்பாமல் தன் உருவத்தை ஹிட்லர் போலவே மாற்றி கொண்டுள்ளார். இவருடன் புகைப்படம் எடுக்க விரும்புவர்களுக்கு, ஒரு புகைப் படத்துக்கு 700 முதல் 4000 ரூபாய் வரை இவர் வசூலிக்கிறார்.
மேலும் ஹிட்லர் பேட்ஜ், ஸ்வஸ்திகா சின்னம், ஹிட்லரின் சுயசரிதை போன்றவற்றை விற்பனை செய்யும் இவர், தினமும் 14 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஹிட்லர் போல இருப்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் என்னைப் பாராட்டி கை கொடுக்கும் போது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நான் இறக்கும் வரை ஹிட்லாராகவே வாழ்ந்து விட்டுப் போகிறேன் என கூறியுள்ளார். இவரது இச்செயலால் தங்களுக்கு எந்தவிதமான சங்கடமும் இல்லை என அவரது மனைவி, 5 மகள்களும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment