ஜனவரி 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்துள்ள விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் அவரது ஒரு நாள் சராசரி வருமானம் ரூ. 1.5 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 40 கோடி அளவுக்கு விளம்பரங்கள் சச்சினுக்கு கிடைத்துள்ளதாம். இதுபோக 2 பங்களாக்களும் அவருக்குக் கிடைத்துள்ளது.
இந்திய விளையாட்டு வீரர்களில் எப்போதுமே வருவாய் விஷயத்தில் உச்சத்தில் இருப்பவர் சச்சின்தான். இடையில் டோணி போன்றோர் வந்து போனாலும் கூட தற்போது மீண்டும் சச்சின் காட்டில் விளம்பரங்கள் மூலம் பண மழை பேயாக கொட்டத் தொடங்கியுள்ளது.
கடந்த 27 நாட்களில் மட்டும் ரூ. 40 கோடி அளவுக்கு விளம்பர ஒப்பந்தங்களைப் போட்டுள்ளார் சச்சின். இதன் மூலம் அவரது கடந்த 27 நாள் வருவாயைப் பார்த்தால் சராசரியாக தினசரி ரூ. 1.5 கோடி கிடைக்கிறது சச்சினுக்கு.
புனேயைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான அமித் என்டர்பிரைசஸ் நிறுவனம் சச்சினை, ரூ. 9 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் எஸ்.குமார்ஸ் துணி நிறுவனம் ரூ. 13 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு முன்பாக கோக்கோ கோலா நிறுவனம் ரூ. 20 கோடிக்கு சச்சினை வளைத்துப் போட்டது நினைவிருக்கலாம்.
அமித் என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் சச்சின் போட்டுள்ள ரூ. 9 கோடி ஒப்பந்தத்தில், தலா ரூ. 2.50 கோடி மதிப்புள்ள இரண்டு பிரமாண்ட பங்களாக்களும் அடக்கம். இவை புனேயில் தரப்படவுள்ளன.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பாதே கூறுகையில், புனேயைத் தாண்டி எங்களை யாருக்கும் தெரியாது. எனவேதான் சச்சினை பிராண்ட் அம்பாசடராக நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் நாடு முழுவதும் நாங்கள் பிரபலமடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் மும்பை, நாசிக்கில் எங்களது திட்டங்களை மேற்கொள்ளப் போகிறோம் என்றார். இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ. 250 கோடியாம். இந்த நிறுவனம் விரைவில் பெங்களூர், சென்னை, ஹைதராபாத்துக்கும் வரவுள்ளதாம்.
எஸ்.குமார்ஸ் நிறுவனத்திற்காக ஏற்கனவே ஷாருக் கான் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பிராண்ட் அம்பாசடர்களாக உள்ளனர். தற்போது சச்சினையும் இவர்கள் வளைத்துள்ளனர்.
கோக் நிறுவனத்திற்காக சமீபத்தில் ரூ. 20 கோடிக்கு புக் ஆனார் சச்சின். அதற்கு முன்பு அவர் பெப்சி நிறுவனத்திற்காக கிட்டத்தட்ட 10 வருடங்கள் பிராண்ட் அம்பாசடராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது பெப்சியின் முக்கிய பிராண்ட் அம்பாசடர் டோணி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வருகிற உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது டோணி, சச்சின் போட்டி விளம்பரங்கள்தான் செம அசத்தலாக இருக்கும் என்று நம்பலாம்.
சச்சின் தற்போது அடிடாஸ், கேனான், ஐடிசி, அவிவா லைப் இன்சூரன்ஸ், தோஷிபா உள்பட 17 நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசடராக இருக்கிறார். ஒரு ஒப்பந்தத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் வசூலிக்கிறார். இவரது விளம்பரம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் வேர்ல்ட் ஸ்போர்ட் குரூப் கவனித்து வருகிறது.
சச்சினைப் போல கெளதம் கம்பீர், விராத் கோலி ஆகியோரும் ஏகப்பட்ட விளம்பரங்களில் கமிட் ஆகி வருகின்றனராம்.
அப்படியே உலகக் கோப்பைப் போட்டியில் நன்றாக விளையாடி 'கப்'பையும் வாங்கிருங்க. அது ரொம்ப முக்கியம்- கிரிக்கெட் ரசிகர்களுக்கு!

No comments:
Post a Comment