மலையாளத்தில் “எலக்ட்ரா” படத்தில் நயன்தாராவின் அம்மாவாக மனிஷா கொய்ராலா நடித்துள்ளார். வயதான அம்மாவாக நடித்ததை பலரும் விமர்சிக்கின்றனர்.
இதுபற்றி மனிஷா கொய்ராலா கூறியதாவது:-
நயன்தாரா அம்மா வேடத்தில் நடிக்க அழைத்தபோது முதலில் யோசித்தேன். எனக்கும் நயன்தாராவுக்கும் கொஞ்சம் வயதுதான் வித்தியாசம். ஆனாலும் படத்தில் எனக்கு அழுத்தமான வேடம். என்னைச் சுற்றியே கதை வரும். எனவே சம்மதித்தேன்.
எனது 20-வது வயதில் “பம்பாய்” படத்தில் இரண்டு குழந்தைகள் தாயாக நடித்துள்ளேன். நயன்தாரா பழக இனிமையானவர். தாயாக நடித்தது தவறல்ல. “மாப்பிள்ளை” படத்தில் தனுஷ் மாமியாராக நடித்ததும் மறக்க முடியாதது.
எனது திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு செய்திகள் பரவுகின்றன. என்னை பொறுத்தவரை திருமணம் என்பது மற்றவர்களுக்காக நடப்பது அல்ல. எனது குடும்ப வாழ்க்கை நன்றாக செல்கிறது.
No comments:
Post a Comment