அஜீத்தின் பிரியாணி ட்ரீட்டில் அசந்து போயிருக்கிறது மங்காத்தா டீம். இந்த தீபாவளியை மங்காத்தா குழுவினருடன் கொண்டாடி இருக்கும் அஜீத், தானே தயாரித்த பிரியாணியை எல்லோருக்கும் வழங்கியதுதான் இதில் ஆச்சரியம். 'அசல்' படத்தின் படுதோல்விக்குப் பின்னர் ரொம்பவும் அப்செட்டான அஜீத் 'நான் கார் ரேசில் கலக்கப் போகிறேன் என கிளம்பிவிட்டார். ஆனாலும் அவரை விடாமல் இழுத்துவந்து 'மங்காத்தா'வில் நடிக்க வைத்திருக்கிறார்கள் தயாநிதி அழகிரியும் வெங்கட் பிரபுவும்.
ராத்திரி பகல் பார்க்காமல் இதுவரைக்கும் காட்டாத அஜீத்தை இதில் காட்டுவோம் என்ற தீர்மானத்தோடு உழைத்து வருகிறார் வெங்கட் பிரபு. தீபாவளியைத் தொடர்ந்து (நவம்பர் 7) தன் பிறந்த நாளையும் அஜீத்துடன் கொண்டாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த தீபாவளிக்கு மங்காத்தாவின் புதிய போஸ்டர்களை வெளியிட்டிருப்பதோடு மட்டும் அல்லாது தல ரசிகர்களுக்காக கதையின் ஒரு அம்சத்தை வெளியே சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கட்.
எல்லாருடைய வாழ்க்கையுமே ஒரு 'கேம்'. இந்த வாழ்க்கை விளையாட்டைதான் மங்காத்தாவில் சொல்ல இருக்கிறோம் என்று சொன்ன அவர், மங்காத்தா கதை ஐ.பி.எல். சமயத்தில் நடக்கும் ஒரு சம்பவமே என்று பளிச்சென ஒரு மேட்டரை வெளியே விட்டிருக்கிறார்.
கிரிக்கெட் மேட்சை மையமாக வைத்து வெங்கட் பிரபு எடுத்த 'சென்னை 28' 'சரோஜா' இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். அந்த வகையில் பார்க்கும் போது மங்காத்தா... அட ஹிட்டுங்கோ!
வாழ்கையின் ஏதோ ஒரு விஷயதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு கேரக்டர் அஜீத்துக்கு. மங்காத்தா படத்தை மே 1ஆம் தேதி வெளியிடவும் வாய்ப்பிருக்கிறதாம். இதுபற்றி வெங்கட் பிரபுவிடம் கேட்டால் 'அட... படத்தை முடிக்க வேண்டியதுதான் என் முதல் வேலை. படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி கையில்தான் இருக்கிறது' என்று சொல்கிறார். அப்போ ‘மே 1’ தல பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளி காத்திருக்கிறது.
அதுமட்டும் இல்லாது மங்காத்தாவின் செய்திகள் அனைத்தும் தல ரசிகர்களுக்கு தினம் தினம் தீபாவளியாகவே அமைகிறது. அஜீத்துடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. யுவனின் இசைக்கு முதன் முறையாக வைரமுத்துவின் வரிகள். படத்தின் ஒரு பாடலை இளையராஜா பாடியிருக்கிறார். அதுவும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து பாடியிருக்கிறார்.
படத்தில் நாகர்ஜுன் நடிக்கிறார் என்பதும் சிம்பு சிறப்பு வேடத்தில் தோன்ற உள்ளார் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பு. இது போதாதென்று, இன்னும் சில ஹீரோக்கள் அஜீத்துடன் சேர்ந்து நடிக்கிறார்கள் என பல சிறப்பு சங்கதிகள்.
இத்தனையும் ஒரு பக்கம் இருக்க, இப்போதைக்கு அஜீத்தின் பிரியாணி கை பக்குவத்தில் மெய்மறந்து போயிருக்கிறது மங்காத்தா டீம். இந்த பிரியாணியை ருசிக்க வைத்த ‘தல’யை வைத்து, ரசிகர்கள் ரசிக்கும்படியாக படத்தை எடுப்பேன்' என்று பஞ்ச் பேசும் வெங்கட் பிரபு, 'நீங்கள் ரெஸ்டாரெண்ட் துவங்கலாமே...' என அஜீத்திடம் ஐடியாவும் கொடுத்து இருக்கிறாராம். அப்போ மங்காத்தா சக்சஸ் ஆனதும் இன்னொரு பிரியாணி ட்ரீட் இருக்குன்னு சொல்லுங்க!
தல ரசிகர்களுக்கு வருகிற மே 1ஆம் தேதி இன்னொரு தீபாவளி காத்திருக்கிறது. ‘தல’ தீபாவளி!
No comments:
Post a Comment