கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள "நடுநிசி நாய்கள்" படத்திற்கு "ஏ" சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு. இந்தபடம் பிப்ரவரி 11ம் தேதி திரைக்கு வருகிறது.
சமீரா ரெட்டி, வீரா மற்றும் புதுமுகங்கள் நான்குபேர் நடித்துள்ள படம் "நடுநிசி நாய்கள்". இப்படத்தை கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கியுள்ளார். நடுநிசி நாய்கள் படம் 1978-ல் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற "சிகப்பு ரோஜாக்கள்" படத்திற்கு பிறகு தமிழில் உருவாகும் உளவியில் சார்ந்த திரில்லர் படமாகும். மைய பாத்திரமான வீரா மற்றும் அனைத்து பாத்திரங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பயங்கரமான இரவில் நடக்கும் சம்பவங்கள், அவன் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புகளை மையமாக கொண்டு கதை அமைந்துள்ளது.
நடுநிசி நாய்கள் திகில் பட வகையை சேர்ந்ததல்ல என்றாலும், பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கான படம் அல்ல. படத்தை பார்த்தவர்கள் உள்ளடக்கம் மற்றும் உருவாகிய விதத்தில் ஒரு பரிசோதனை முயற்சி என்பதை மீறி இந்தப்படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் என்று பாராட்டியுள்ளனர். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ஏ சான்று அளித்துள்ளனர். அத்துடன் படத்தில் ஒரு காட்சியை கூட வெட்டவில்லையாம்.
படத்தின் அடிநாதமாக அமைந்துள்ள சமூகத்திற்கான செய்தியை அனைவரும் உணரும் வகையில், படத்திற்கான சிறப்பு காட்சிகள் போன்ற முயற்சியில் இயக்குநர் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளார். படம் பிப்ரவரி மாதம் 11ம் தேதி ரிலீசாகிறது.
No comments:
Post a Comment