தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் பங்கு பெறும் என டெல்லியில் கருணாநிதி அறிவித்தார். தேசிய பாதுகாப்பு குறித்து முதல்- அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று மதியம் டெல்லி புறப்பட்டார். டெல்லி சென்றடைந்த கருணாநிதி, நிருபர்களுக்கு கூட்டணி பற்றி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியுடன் பா.ம.க., முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள்,புரட்சி பாரதம் ஆகியவை இணையும். காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று நாளை சோனியா காந்தியுடனும், மன்மோகன்சிங்குடனும் கலந்தாலோசிக்கப்படும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்று நாளையே முடிவு செய்யப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது பற்றி சொல்ல முடியாது, ஆனால் விரைவில் தெரிவிக்கப்படும் என கருணாநிதி கூறினார்.
No comments:
Post a Comment