மத்திய அரசு பத்ம விருதுகளை இன்று அறிவித்துள்ளது.
பிரபல பிண்ணணி இசை பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், திட்டக்குழு துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, கிரிக்கெட் வீரர் லட்சுமணண், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் விருதுகளை வழங்க இருக்கிறார்.
விருது பெற்றுள்ளவர்களின் விபரம்:-
பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவர்கள் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, ஓட்டப்லக்கல் என் வி குருப் திட்டக்குழு துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, முன்னாள் நிதி குழு தலைவர் விஜய் கேல்கர், பிரிஜேஸ் மிஸ்ரா, டாக்டர் கபிலா வத்சயன், மறைந்த பொருளாதார நிபுணர் எல் சி ஜெயின், சிதாகாந்த் மகாபட்ரா, ஏ. ஆர். கித்வாய், ஹோஙமய் தாராவல்லா, ஏ.நாகேஸ்வர ராவ், பிரசரன் கேசவ ஐயங்கார், பரே ராம ராவ், ஆகியோருக்கு பத்மவிபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருதுகள் பெற்றவர்கள்:-
கிரிக்கெட் வீரர்கள், வி.வி. எஸ் லட்சுமணன், ஹர்பஜன் சிங், குத்து சண்டைவீரர் சுசில் குமார்.
துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங் நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான். பாடகர்உஸா உத்தப், விளையாட்டு வீரர் கிருஷ்ணா பூனியா ,நாராயண் சிங்பாட்டி, மடனூர் அகமது அலி, ஏ மார்தண்டா பிள்ளை, கைலாசம் ராகவேந்தர ராவ், அவ்வை நடராஜன், மன்சூர் ஹசன், பேராசிரியர் ஐ ஏ சித்திக், குஞ்சராணி தேவி, பி கே சென், புக்ராஜ் பப்னா, கோபாலன் நாயர் சங்கர், பல்ராஜ் கோமல், பருன் மஜதும்தார், உள்ளிட்ட 84 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண் விருதுகள் பெற்றவர்கள்:-
நம் தமிழகத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், ஐசிசிஐ வங்கி நிர்வாக இயக்குநர் சந்தாக் கொச்சர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்யாம் சரண், கிரிஷேன் கண்ணா, சத்யதேவ் துபேய், இசையமைப்பாளர் கயாம், நடிகர்கள் சசி கபூர் , சூர்யநாராயண ராமசந்திரன், மறைந்த டாக்டர் கே.கீ. பீரம்ஜி கிராண்ட் மற்றும் மறைந்த தஷ்ரத் படேல் வகிடா ரெஹ்மான், எஸ் கோபால கிருஷ்ணன், யோகேஷ் சந்தர் தேவேஷ்வர், சி.வி சந்திரசேகர், குணபதி வி.கிருஷ்ண ரெட்டி, அஜய் சவுத்ரி, சுரேந்திர சிங், ஐ டிசி தலைவர் ஓய் சி தேஷ்வர், டாக்டர் ராம்தாஸ் பாய், ருத்ரபாட்னா கிருஷ்ணா எஸ் ஸ்ரீகந்தன், அர்பிதா சிங், விஜேன் முகர்ஜி, ராஜஸ்ரீ பிர்லா, ஷோபனா ராணடே, கே அஞ்சி ரெட்டி, அனல்ஜித் சிங், ராஜேந்திர சிங் பவார், எம் என் புச், தாயில் ஜாகோப் சோனி ஜார்ஜ், சங்கா கோஷ், மறைந்த கே ராகவன் திருமுல் பாண்ட், ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment