நல்ல பெயர் வாங்க ஆசை
வில்லங்க படங்கள் எடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட சாமிக்கு அடுத்து ஒரு நல்ல படம் எடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால் உடுமலைப்பேட்டையில் இருந்தபடி தீவிரமாக திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார். காதல் கதையாம். அமலா நடித்தால் நன்றாக இருக்கும் என்பது சாமியின் கணிப்பு. அவருக்கு எப்போது போன் போட்டாலும் நாட் ரீச்சபிள்தானாம். அதனால் புதுமுகம் தேடிக் கொண்டிருக்கிறார். ‘சிந்துசமவெளி’ காலர் டியூனைகூட மாற்றி இப்போது ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்...’ என்று மாற்றிவிட்டார்.

விளம்பரங்களுக்கு மோஸ்ட் வாண்டட் ஆன நடிகை
அறிமுக நிலையிலேயே விளம்பரங்களுக்கு மோஸ்ட் வாண்டட் ஆன ஒரே நடிகை அமலாபால்தான். ஒரு சில விளம்பர படங்களில் நடித்து விட்டாலும் அடுத்து பல முன்னணி நிறுவனங்கள் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன. இதற்கிடையில் ‘மைனா’வுக்கு முன் சில மாவட்ட தலைநகர் கடை விளம்பரங்களில் நடிக்க ஒப்புதல் கொடுத்திருக்கிறார் அமலா. இப்போது அந்த நிறுவனங்களுக்கு நடித்துக் கொடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலும் இருக்கிறாராம்.

என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு?
சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு பெங்களூருவில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் நிர்வாகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார் பூஜா. ‘என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு? ஒரு படத்துக்கு 20 லட்சம் வரை சம்பளம் பெறும் நிலையில் இருப்பவர் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தது ஏன்?’ என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் மில்லியன் டாலர் கேள்வி. சினிமாவில் அவருக்கு சில கசப்பான அனுபவங்கள். அதனால் வெறுத்து ஒதுங்கி விட்டார் என்றும், அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கும் கணவருக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் வேலையில் சேர்ந்து விட்டார் என்றும் அதே கேள்விக்கு பதில்களும் உலா வருகிறது.

ஆர்யாவின் கவுரவம்
இன்றுள்ள இளம் ஹீரோக்களில் கவுரவ வேடங்களில் அதிகம் நடிப்பவர் ஆர்யாதான். நட்புடன் யார் அணுகினாலும் உடனே ஓகே சொல்லி விடுகிறார். ‘ரெண்டு சீன்ல நாம நடிச்சுட்டு போறது ஏதோ ஒரு வகையில அவங்களுக்கு யூஸ்புல்லா இருக்குனா சந்தோஷந்தான் பாஸ்’ என்கிறார். கடைசியாக ‘பரிமளா திரையரங்கம்’ என்ற சின்ன பட்ஜெட் படத்தில்கூட நடித்திருக்கிறார். ஒரு பழைய திரையரங்கை புதுப்பித்து கட்டும் ஹீரோ அதை நடிகர் ஆர்யாவை வைத்து திறக்க ஆசைப்படுகிறார். அதை ஏற்று அந்த சிறிய கிராமத்துக்கு வந்து தியேட்டரை திறந்து வைக்கிறார். இதற்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்து அன்று முழுவதும் பயங்கர கூட்டத்துக்கிடையே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆர்யாவின் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு நாள் கால்ஷீட்டின் மதிப்பு பல லட்சங்கள்.

சென்சார் மீது எஸ்.பி. சரண் தாக்கு
நடிகரும் பாடகருமான எஸ்.பி. சரண் தயாரித்துள்ள படம் 'ஆரண்ய காண்டம்'. ரவி கிருஷ்ணா, ஜாக்கி ஷெராப், சம்பத், யாஸ்மின் நடித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். அடுத்த மாதம் ரிலீசாகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது. அத்துடன் பல காட்சிகளை வெட்டிவிட்டதாம். இதனால் கோபம் அடைந்திருக்கிறார் எஸ்.பி. சரண். இது பற்றி அவர் கூறியது: இந்தப் படம் போதை கும்பலை பற்றிய கதை கொண்டது. அவர்களை பற்றி சொல்லும்போது, துப்பாக்கி, ரத்தம் என காட்சிகள் இருப்பது பெரிய விஷயம் கிடையாது. படத்தில் வன்முறை இருப்பதாகக் கூறி ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அது கூட பரவாயில்லை. பல காட்சிகளை நீக்கிவிட்டதுதான் தாங்க முடியவில்லை. இதை விட வன்முறை அதிகம் உள்ள பல படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளது. அதையெல்லாம் சென்சார் அனுமதித்து இருக்கிறார்கள். சூர்யா நடித்த 'ரத்த சரித்திரம்' படத்திலும் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தன. ஒரு படத்தை குழந்தை போல் நினைத்து பாதுகாக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் அக்கறை காட்டுகிறோம். அந்த காட்சிகளை வெட¢டி எறிவதை சகிக்க முடியவில்லை.

சம்பளம் பற்றி கவலைப்படாத நடிகர்கள்
புதுமுகங்கள் அமீத் பதக், நீது சவுத்ரி நடிக்கும் படம் ‘அன்பிற்கு அளவில்லை’. படம் குறித்து இயக்குனர்கள் மரியம் கானசக், ஆனந்த்பாபு கூறியது:
இந்தியாவில் ஆண¢டுதோறும் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. 2007ம் ஆண்டில் 3,874 விவாகரத்துகள் நடந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 4,643 விவாகரத்துகள் நடந்துள்ளது. குழந்தை பிறந்ததும் கணவன், மனைவி இடையே தூரம் அதிகமாகிவிடுகிறது. குழந்தையை வளர்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதனால் தம்பதி இடையிலான பாசம் குறைந்து விவாகரத்துகள் நடக்கின்றன. இதன் பின்னணியில் இப்படக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப¢படத்தை பார்த்து கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள் இணைந்தால் அதுவே படத்தின் வெற்றி. நல்ல கருத்தை சொல்வதால் படத¢தில் நடிப்பவர்கள், டெக்னீஷியன்கள் சம்பளம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடாமல் பணியாற்றுகின்றனர். படம் முடிந்த பின் நாங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment