சென்னையில் நேற்று மரணமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ போளூர் வரதன் மீண்டும் எம்.எல்.ஏ. சீட் பெறக் கூடாது என்று வேண்டி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து வேண்டிக் கொண்டனர் காங்கிரஸார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டசபைத் தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் போளூர் வரதன். இவர் மொத்தம் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். முதல் முறை இவர் போட்டியிட்டது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியாகும். இந்தத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோதுதான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 2 தேர்தல்களில் செங்கம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் வரதன். இவர் தொகுதிப் பக்கம் அதிகம் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு காங்கிரஸாரிடையே இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரதன் அதிருப்தியாளர்கள் திரண்டு செங்கம்புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். மீண்டும் வரதனுக்கு சீட் கிடைக்கக் கூடாது என்று வேண்டி நடந்த நிகழ்ச்சி இது. இது நடந்த அடுத்த சில நாட்களிலேயே வரதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரதனுக்கு எதிரான நிகழ்ச்சியில் கோழிக் கறியுடன் கூடிய விருந்தும் இடம் பெற்றது. தட்டு நிறைய சாப்பாட்டை வைத்துக் கொண்டு கோழிக் கறியை சுவைத்து கடித்துச்சாப்பிடும் தொண்டரின் படமும் வெளியாகியுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பெரும் திரளான காங்கிரஸார் கலந்து கொண்டு வரிசையில் நின்று கோழிக்கறி சோற்றை வாங்கிச் சாப்பிட்டுள்ளனர்.
மேலும் பல பெண்கள் வரதனுக்கு சீட் கிடைக்காவிட்டால் பொங்கல் வைத்து மொட்டை போட்டுக் கொள்வதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டனராம்.
தற்போது வரதன் மறைந்து விட்டார். அம்மனுக்கு வைத்த வேண்டுதலுக்கும், வரதன் மறைவுக்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, இப்படி ஒருவருக்கு சீட் கிடைக்கக் கூடாது என்பதற்காக காங்கிரஸார் வைத்த விருந்து நிகழ்ச்சியும், வேண்டுதலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment