பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சீவி அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து ஆந்திர மாநிலம் அனந்தபுரம் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது தொண்டர்கள் அவரது அருகே நெருங்கி வந்து போட்டோ எடுத்துக் கொள்ள முயன்றனர். அப்போது அவர்களை சற்று தள்ளி நில்லுங்கள் என்று சிரஞ்சீவி கூறினார்.
ஆனால் ஒரு தொண்டர் அவர் அருகில் இருந்து நகர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த தொண்டரின் கன்னத்தில் “பளார்” என 4 தடவை அறைந்தார். இதைப்பார்த்ததும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்ற தொண்டர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் சிரஞ்சீவிக்கு தாங்கள் கட்டி இருந்த பேனர்கள் கட்- அவுட்களை தீ வைத்து எரித்தனர்.சுவரொட்டிகளை கிழித் தெறிந்தனர்.
இதனால் வெறுத்துப்போன சிரஞ்சீவி சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு திடீரென காரில் ஏறி சென்று விட்டார். தொண்டரின் கன்னத்தில் சிரஞ்சீவி “பளார்” விட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனந்தபுரத்தை சேர்ந்த பிரஜா ராஜ்ஜியம் தொண்டர் ரமணய்யா கூறும் போது, “சிரஞ்சீவி பொது இடத்தில் வைத்து தொண்டரை அடித்தது தவறு. எதற்கெடுத்தாலும் கோபப்படுவது தலைவருக்கு அழகல்ல.
இந்த சம்பவத்தால் தொண்டர்கள் பலர் சிரஞ்சீவி மீது கடும் அருப்தியில் உள்ளனர்” என்றார்.
No comments:
Post a Comment