தனது கூட்டணிக்குள் விஜய்காந்தை இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தேமுதிக தரப்பிலிருந்து தொடர்ந்து பல நிபந்தனைகள் போடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
60 சீட்டுகள், துணை முதல்வர் பதவியை தேமுதிக எதிர்பார்ப்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுகவுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு 30 சீட்டுகள் வரை தருவதாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு அதை 45 வரை கூட உயர்த்தத் தயாராகிவிட்டதாகவும் அதே நேரத்தில் துணை முதல்வர் பதவியை தருவது சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேண்டுமானால் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளத் தயார் என்ற புதிய பார்முலாவை அதிமுக முன் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தங்களையும் சேர்த்துப் பேச வேண்டாம் என்றும், தங்களுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் சில அமைச்சர் பதவிகளைத் தர வேண்டும் என்றும் தேமுதிக கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதை அதிமுக ஏற்க மறுப்பதால் தான் இந்தக் கூட்டணி் உருவாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தன்னிடம் உள்ள மதிமுக, இடதுசாரிகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவை வைத்துக் கொண்டு திமுக கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமே இல்லை என்று ஜெயலலிதா நினைப்பதால் எப்படியாவது விஜய்காந்தை கூட்டணிக்குள் இழுக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
இதனால் தான் தொடர்ந்து பல நிபந்தனைப் போட்டாலும் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையை அதிமுக தொடர்ந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் தனது மனைவி பிரேமலதாவுக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் அல்லது தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் தர வேண்டு்ம் என்று அதிமுகவிடம் விஜய்காந்த் கோரியுள்ளதாக வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இதில் துணை முதல்வர் பதவி தருவது எல்லாம் சாத்தியமி்ல்லை, அதே நேரத்தில் இடங்களின் எண்ணிக்கையை வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் உயர்த்தித் தரத் தயார் என்று அதிமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதாககத் தெரிகிறது.
விஜய்காந்த் தரப்பில் பிடிவாதம் தொடர்வதால் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியோருடன் தொகுதி்ப் பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ளது. முதலில் விஜய்காந்துக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு பின்னரே இடதுசாரிகளுடன் பேச்சு நடத்த ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால், காலம் கடந்து கொண்டே போவதால் வேறு வழியில்லாமல் இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை அவர் துவக்கிவிட்டதாகத் தெரிகிறது.
விஜய்காந்த் வராமல் போய்விட்டால் நிலைமையை சமாளிக்க தோதாக பாமகவை கூட்டணிக்குள் இழுக்கவும் அதிமுக தரப்பு முயன்று வருவதாகத் தெரிகிறது. கடந்த முறையை விட கூடுதலாக சில சீட்டுகள் தருவதாகவும் அதிமுக தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாமக தரப்பிலிருந்து இதுவரை அதிமுகவுக்கு சாதகமான பதில் வரவில்லை என்கிறார்கள்.
வாரிசு அரடியலை மேடைக்கு மேடை சாடும் இவர் சென்ற தேர்தலில் பெற்ற ஓட்டு மொத்தம் எட்டு சதவீதம். இதற்கே மனைவிக்கு துணை முதல்வர் பதவி கேட்க்கும் இவரு கட்சியில் இருக்கும் மூத்த தலைவரும் இவருக்கு பேசுறதுக்கு எழுதி எழுதி கொடுத்து விரல் தேஞ்சு போகி உக்காந்து இருப்பவருமான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கொடுக்கலாமே ஏன மனைவிக்கு கொடுக்கணும்....இது பேரு வாரிசு அரசியல் இல்லையா எட்டு சதவீதத்துக்கே இந்த போடா ......

No comments:
Post a Comment