டெல்லி புறநகர் நொய்டாவை சேர்ந்த பல் டாக்டர் ராஜேஷ் தல்வார். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருடைய மகள் அருஷி (வயது 14). 2008-ம் ஆண்டு மே 15-ந்தேதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் வேலைக்காரர் கெம்ராஜூம் கொலை செய்யப்பட்டார். அவரது பிணம் வீட்டு மாடியில் கிடந்தது.
இருவரையும் அருஷி தந்தை ராஜேஷ் தல்வார்தான் கொலை செய்ததாக உத்தரபிரதேச போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் ராஜேஷ் தல்வாரின் மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அவர்கள் நீண்ட காலம் விசாரணை நடத்தியும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ராஜேஷ் தல்வார் கொலை செய்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. எனவே வழக்கை முடித்து கொள்வதாக கோர்ட்டில் தெரிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை இன்று காசியாபாத் சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. ராஜேஷ் தல்வார் கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென பாய்ந்து அவர் மீது தாக்கினார். இரும்பு, கத்தி போன்ற ஆயுதத்தால் முகத்தில் குத்தினர். இதில் அவர் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.
உடனே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். போலீசாரும் வக்கீல்களும் அவரை சரமாரி அடித்து உதைத்தனர். அந்த வாலிபர் பெயர் உத்தவ் சர்மா. அகமதாபாத்தில் சினிமா தயாரிப்பு கல்லூரி மாணவர் என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு சண்டிகாரில் ருச்சிகா தற்கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வந்த முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ரத்தோர் கத்தியால் குத்தப்பட்டார். அந்த தாக்குதலை நடத்திய அதே உத்தவ் சர்மாதான் ராஜேஷ் தல்வாரையும் தாக்கியுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனால் தான் இப்படி நடந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment