சிலருக்கு வாயே நோய்! அந்த சிலரில் முதலிடத்தில் இருப்பார் போலிருக்கிறது மாதவன். கடந்த சில வருடங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளர்கள் பற்றி இவர் கொடுத்த பேட்டி ஒன்று பெரும் விவகாரத்தில் கொண்டுபோய் விட்டது மேடியை. தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கணும். இல்லையென்றால் எல்லா மொழிகளிலும் தடை என்ற வஜ்ராயுதத்தை எடுத்து வீசியது சங்கம்.
அப்புறமென்ன? அடக்கமே அமரருள் ஊய்க்க அமைதியாக வந்திறங்கினார் மேடி. வார்த்தைக்கே வலிக்காமல் ஒரு மன்னிப்பை கேட்டுவிட்டு ஓடிப் போனார். அதெல்லாம் மறந்திருக்கும் போல... சமீபத்தில் ஒரு முன்னணி இதழில் எந்திரனை விட மன்மதன் அம்பு சுமாரான படம்தான் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். திருப்பதியில் நின்று கொண்டு மொட்டையை விமர்சிக்கலாமா? இதே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இவரே சொன்னதுதான் வினை. மேடிக்கு விழுந்தது மொத்து! படம் தொடர்பான அத்தனை பேரும் ஒரு முறை போனில் வந்து இஞ்சி மரபா கொடுத்தார்கள். கடைசியாக வந்தது கமல்ஹாசன்தானாம்.
இனிமே இப்படியெல்லாம் வாயை விட மாட்டேன் என்று மாதவன் மனம் வருந்திய பிறகுதான் கூலானாராம் உலக நாயகன்!
No comments:
Post a Comment