திருமலை நாயகர் தூணையே தீக்குச்சியை ஆட்டுவது மாதிரி ஆட்டி வைத்துவிட்டது சூழ்நிலை. ஒரு பக்கம் ஷங்கர். இன்னொரு பக்கம் ஜெமினி லேப். இவ்விரு பிரமாண்டங்களுக்கே தங்கள் படத்தில் நடிக்க ஒரு ஆர்ட்டிஸ்டை கொண்டு வருவதில் அத்தனை சிரமம் என்றால் யாரால்தான் நம்ப முடியும்? எப்படியோ... ஷங்கர் இயக்கப் போகும் மூவர் படம் குறித்து இதுவரை நிலவி வந்த கசமுசாக்கள் ஒருவழியாக ஓவர்!
பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து கால்ஷீட் ரெடி என்று கூறிவிட்டாராம் விஜய். முதலில் இப்படத்தில் நடிப்பதற்காக ஷங்கர் அழைத்தது சூர்யாவைதான். அப்புறம்தான் விஜய்யிடம் போனார். பின்பு அங்கும் பிரச்சனை. மறுபடியும் சூர்யாவிடம் வந்தார். இப்படி பந்து போல அவர் உருட்டப்பட்டாலும் முடிவு அவ்வளவு ஈசியாக அமைந்துவிடவில்லை. தன்னை தேடி வந்த ஜெமினி லேப் முக்கியஸ்தர்களிடம் ஏதேதோ கண்டிஷன்கள் போட்டார் சூர்யா. ஆனால் ஷங்கரே நேரில் சென்றிருந்தால் சூர்யா இவ்வளவு பேசியிருக்கப் போவதில்லை என்கிறார்கள் விபரமறிந்த சில திரையுலக பிரமுகர்கள். ஆனால் ஷங்கர் தன் ஈகோவை விட்டுவிட்டு எப்படி சூர்யாவை சந்திக்க போக முடியும் என்றும் கேட்கிறார்கள் அவர்களே.
இந்த படம் கைநழுவி போனதில் கூட கவலைப்படவில்லையாம் சூர்யா. போகிற வேகத்தில் பெயரை கெடுத்துவிட்டு போய்விட்டதே என்பதுதான் அவருக்குள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் இதுபற்றி மீடியாக்களிடம் விரிவாக பேசுவார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
No comments:
Post a Comment